ஒரு வருட இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகள் : ஒரு வினோத சம்பவம்!!

507

அமெரிக்காவில் 30 நிமிட இடைவெளியில் பிறந்ததால், இரட்டைக் குழந்தைகளில் ஒன்று ஒரு வருட இடைவெளிக்கு பிறகு பிறந்த வினோத சம்பவம் நடைபெற்றது.

இண்டியானாவில் Dawn Gilliam, Jason Tello தம்பதிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. Joslyn Grace Guilen Tello என்ற அவர்களது பெண் குழந்தை 2019ஆம் ஆண்டு 31ஆம் திகதி நள்ளிரவு 11.37க்கு பிறந்து 2019ஆம் ஆண்டில் கடைசியாக பிறந்த குழந்தை என்ற பெயரை பெற்றாள்.

ஆனால், அவளது தம்பி Jaxon DeWayne Mills Tello, அக்கா பிறந்து 30 நிமிடம் கழித்துதான் பிறந்தான். அதாவது 2020ஆம் ஆண்டு அதிகாலை 12.07க்கு அவன் பிறந்தான். அவனும் 2020ஆம் ஆண்டு பிறந்த முதல் குழந்தையாக வரலாற்றில் இடம் பிடித்துக்கொண்டான்.

ஆக, அக்காவும் தம்பியும் ஒரு வருட இடைவெளியில் பிறந்ததோடு ஆண்டின் கடைசி குழந்தை என்ற பெயரை அக்காவும் ஆண்டின் முதல் குழந்தை என்ற பெயரை தம்பியும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.