ஏழு பேரின் உடலில் உயிராக இருக்கின்றான் : மகனுக்கு இறுதிச் சடங்கு செய்ய மறுக்கும் பெற்றோர்!!

467

ஏழு பேரின் உடலில்..

தமிழகத்தில் வீதி விபத்தில் ம ரணமடைந்த இ ளைஞரின் உடல் உறுப்புகளால் ஏழு பேரின் உ யிர் கா ப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நெகிழ வைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த காந்தி நகரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சரத்குமார். வெற்றிவேல் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியின் மகனான இவர், சிவகங்கையில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 11 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணியளவில் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இளையான்குடி சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த சரத்குமார் சுமார் 2 மணிநேரமாக கேட்பாரற்று சாலையில் கிடந்துள்ளார். பின்னர் அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸ் ஒன்றில் சரத்குமாரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சரத்குமாரிடம் இருந்த அடையாள அட்டையை வைத்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இளைஞர் சரத்குமாரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

உடனடியாக சரத்குமாரை மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், சரத்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக 15 ஆம் திகதி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பெற்றோரின் அனுமதியுடன், சரத்குமாரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மறைந்த சரத்குமாரின் உடல் உறுப்புகள் மூலம் ஏழு நோயாளிகள் மறுவாழ்வு அடைந்துள்ளனர்.

இதனிடையே ம ரணமடைந்த சரத்குமார் ஏழு பேரின் உடலில் உயிருடன் இருப்பதாகக் கூறி அவருக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.