தர்ஷனா…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் நீதானே எந்தன் பொன்வசந்தம். இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர் தர்ஷனா. குன்னூரில் பிறந்து வளர்ந்தவர்.

பல் மருத்துவம் படித்துள்ளார். சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது சில போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்புதான் நீ தானே என் பொன்வசந்தம் சீரியல்.

இவருடைய தந்தை அசோகனும் ஒரு மருத்துவர். சொந்தமாக கிளினிக் வைத்திருக்கும் அசோகன் தன்னுடைய ஆசைக்காக தான் தர்ஷனாவை மருத்துவம் படிக்க வைத்தாராம்.

ஆனால் தர்ஷனாவுக்கோ, மருத்துவம் படித்தாலும் அவருக்கு நடிப்பு மீது தான் ஆசையாம்.

அதனால் தான் படிப்பை முடித்ததும் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற கிளம்பி விட்டார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு தமிழக மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

மேலும் 40 வயது ஆணுக்கும், 20 வயது பெண்ணுக்கும் இடையேயான காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியலில், அனு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.