அவரவர் நட்சத்திர முறைப்படி வணங்க வேண்டிய சித்தர்கள்!

396

ஒவ்வொரு நட்சத்திரத்தையும் ஒரு குறிப்பிட்ட சித்தர் வழி நடத்துகிறார் என்பது ஐதீகம். தற்போது பூமியில் சித்தர்கள் வழிபாடு அதிகரித்துள்ள நிலையில் அவரவர் நட்சத்திரத்திற்கேற்ற சித்தரை வணங்குவதன் மூலம் அனைத்து நலன்களையும் பெற்று மகிழ்வோடும் நிம்மதியோடும் இந்த வாழ்வு பயணத்தை கடக்க முயற்சிப்போம்.

சித்தர்களை மரியாதையோடு அழைத்தால் அவர்கள் மனமிரங்கி அருள்புரிவார்அவர்களுக்கான மந்திரம் இதோ:ஓம் குருவே சரணம் என்று மூன்று முறை கூறி ஓம் ஸ்ரீ (குறிப்பிடப்பட்ட சித்தர் பெயர்) சித்த குரு ஸ்வாமியே சரணம் – இந்த மந்திரத்தை முடிந்த அளவு மனம் விரும்பும் வரை கூறி வரலாம்

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் காளங்கி நாதர் ஆவர். இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்ச மலை மற்றும் திருக்கடையூரில் உள்ளது. இவருக்கு பெயரே மந்திரம் என்றுதான் குறிப்பிடப்படுகிறது.

பரணி நட்சத்திரத்துக்குரிய சித்தராக கருதப்படுபவர் போகர் ஆவார். இவர் பழனி மலை முருகன் சந்நிதியில் சமாதி அடைந்துள்ளார். இவரை முறையாக வழிபாட்டு வந்தால் பரணி நட்சத்திரக்காரர்கள் வேண்டுவன எல்லாம் கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்துக்குரியவர் ரோம ரிஷி சித்தர் ஆவார். இவருக்கு சமாதி என்பதே கிடையாது. இவர் உடல் அழியவே இல்லை என நம்பப்படுகிறது. இவர் உடலோடு நேரே கைலாயத்திற்கு சென்று விட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இவரை திங்கள் கிழமை அன்று வெள்ளை ஆடை அணிந்து கயிலாயம் இருக்கும் வடதிசை நோக்கி அமர்ந்து வணங்கி வர அணைத்து நலன்களையும் பெற முடியும் என குறிப்புகள் கூறுகின்றன.

ரோகிணி நட்சத்திரத்திற்குரிய சித்தர் மச்ச முனி சித்தர் ஆவார். இவரது ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. இவரை முறையாக வழிபாட்டு வந்தால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

மிருகசீரிட நட்சத்திரத்திற்குரியவர் பாம்பாட்டி சித்தர் ஆவார். இவரது ஜீவ சமாதி சங்கரன் கோயில் எனும் ஊரில் உள்ளது. இதே போல இந்த நட்சத்திரத்திற்குரிய இன்னொரு சித்தர் சட்டைமுனி நாதர் ஆவார். இவர் திருவரங்கத்தில் சமாதி நிலை அடைந்துள்ளார். இந்த இருவரில் யாரை வேண்டுமானாலும் இவர்கள் வணங்கலாம்.

திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய சித்தர் இடைக்காடர் ஆவார் இவரது ஜீவ சமாதி திருவண்ணாமலையில் உள்ளது. இவரை முறையாக வணங்கினால் வாழ்வு முழுமைக்கும் உங்கள் வழிகாட்டியாக இவர் திகழ்வார் என்று கூறப்படுகிறது.

புனர்பூச நட்சத்திரத்திற்குரிய சித்தர் தன்வந்திரி ஆவார் இவர் வைத்தீஸ்வரன் கோயிலில் ஜீவ சமாதி ஆனவர் ஆவார்.பூச நட்சத்திரத்துக்குரியவர் கமலமுனி சித்தர் ஆவார் இவர் திருவாரூரில் ஜீவ சமாதி அடைந்துள்ளார்.

ஆயில்ய நட்சத்திரத்திற்குரிய சித்தர் அகத்தியர் ஆவார் இவரது ஒளி வட்டம் என்று சொல்லக் கூடிய சூட்சும உடல் பொதிகை மலையில் உள்ளது. இவரது சமாதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ளது இவர்கள் அகத்திய முனிவரை வணங்கி வந்தால் அகத்தியர் இவர்களது வாழ்வின் நலன்களை மேம்படுத்துவார்.

மக நட்சத்திரத்திற்குரிய சித்தராக கருதப்படுபவர் சிவவாக்கியர் ஆவார். இவரது ஜீவசமாதி கும்பகோணத்தில் உள்ளது. இவரை வணங்கி வந்தால் மற்றும் இவர் பாடல்களை படிப்பதால் வாழ்தல் சுகமாக இருக்கும்.

பூரம் நட்சத்திரக்காரர்களுக்கான சித்தர் என்று பார்க்கையில் ஆண்டாள் தான் முதன்மையாக இருக்கிறார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே. அதுமட்டுமின்றி ராமதேவர் என்கிற சித்தரையும் வணங்கலாம் இவரை யாக்கோபு என்று இன்னொரு பெயரால் அழைக்கின்றனர். இவரது ஜீவசமாதி இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் உள்ளது. இவரது சூட்சும உடல் வந்து போகும் இடம் அழகர் மலையாகும். இவரைக் காண அழகர் மழைக்கு செல்வது நன்மை பயக்கும்.

உத்திரம் நட்சத்திரகாரர்கள் வணங்க வேண்டிய சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவரது ஜீவசமாதி திருச்சி உறையூரில் உள்ளது.

ஹஸ்த நட்சத்திரத்திற்குரியவர் கருவூரார் ஆவார் இவர் சமாதி கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது.அடுத்து இவரது சூட்சும சரீரம் வந்து செல்லும் இடமாக தஞ்சை பெரிய கோயில் இருக்கிறது. மன ஒருநிலையோடு இவரை மனமுருக வேண்டினாள் இருக்கும் இடத்திற்கே வந்து அருள்பாலிப்பார் என்கிறது குறிப்புகள்.

சித்திரை நட்சத்திரத்திற்குரிய சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணாசேர் எனும் இடத்தில இவரது ஜீவசமாதி அடைந்து இருக்கிறார்.

ஸ்வாதி நட்சத்திரத்திற்குரிய சித்தர் புலிப்பாணி சித்தர் ஆவார் . இவரது ஜீவசமாதி பழனி அருகே வைகாவூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவரை மனமுருக வேண்டினால் நமக்கு ஏற்படும் இடையூறுகளை இவர் நீக்கி வாழ்வில் வளம் சேர்க்கிறார்.

விசாக நட்சத்திரத்துக்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார் .காசியில் உள்ள பனாரஸ் நகரில் நந்தீசர் ஜீவசமாதி உள்ளது. குதம்பை சித்தரின் சமாதி மாயவரத்தில் உள்ளது.

அனுஷ நட்சத்திரத்திற்கான சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவர் ஆவார். இவரது ஜீவசமாதி எட்டுக்குடி எனும் ஊரில் அமைந்துள்ளது. மனதார இவரை வணங்கி வர அணைத்து நலன்களையும் நல்குபவர் என்று குறிப்பிடப்படுகிறது.

கேட்டை நட்சத்திரத்திற்கான சித்தர் வியாச பகவான் ஆவார். இவர் உடல் அழிவற்றது. ஆகையால் காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தால் போதும். உடனே அவ்விடம் வருவார்.

மூலம் நட்சத்திரம் இவர்களுக்குரிய சித்தர் பதஞ்சலி ஆவார். இவரது சமாதி ராமேஸ்வரத்தில் இருக்கிறது.

பூராடம் நட்சத்திரம் இவர்கள் வணங்க வேண்டிய சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் இவரை வணங்கி வரலாம்

உத்திராடம் நட்சத்திரம் இவர்களுக்கான சித்தர் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் அமைந்திருக்கிறது.

திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவரது சமாதி பாண்டிச்சேரி அடுத்த பள்ளித்தென்னல் எனும் இடத்தில் உள்ளது.