பரம்பரை வீட்டை தானமாக கொடுத்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!!

836

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தன்னுடைய பரம்பரை வீட்டை காஞ்சி மடத்திற்கு தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஆந்திராவை சேர்ந்தவரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இவருடைய இசை சேவையை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இந்நிலையில், பாலசுப்பிரமணியம், ஆந்திராவின், நெல்லூரில் இருக்கும் தன்னுடைய பரம்பரை வீட்டை, காஞ்சி மடத்திற்கு தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தற்போது சென்னையில் வசித்து வரும் இவர், தனது பூர்வீக வீட்டை வேத பாடசாலை அமைப்பதற்காக காஞ்சி மடாதிபதி, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் தனது வீட்டை, முறைப்படி ஒப்படைத்தார். அந்நிகழ்ச்சியில், காஞ்சி மடாதிபதி முன் அவர் ஆன்மீக பாடல் ஒன்றையும் பாடினார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும் இவர் ஒரு தமிழ் சினிமா பாடகராகவே அறியப்படுகிறார்.

திரைப்பட பின்னணி பாடகராக வளர்ந்த பின் அவர் சென்னைக்கு குடியேறிவிட்டாலும் அவருடைய பூர்வீக வீடு நெல்லூரில் அப்படியே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.