அறுவை சிகிச்சையின் மூலம் ஆணாக மாறிய பொலிஸாரை திருமணம் செய்த இளம்பெண்!!

971

பாலின அறுவை சிகிச்சையின் மூலம் ஆணாக மாறிய பொலிஸாருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் மகாராஷ்டிராவில் திருமணம் நடைபெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராஜேகாவ் கிராமத்தில் 1988ம் ஆண்டு லலிதா குமாரி சால்வே என்பவர் பிறந்துள்ளார். படித்து முடித்ததும் பொலிஸ் கான்ஸ்டபிள் பணியில் சேர்ந்த லலிதா, கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய உடலில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று அவர் பரிசோதனை மேற்கொண்ட போது, பெண்களின் உடலில் இருக்க கூடிய இரண்டு எக்ஸ் குரோமோசோம்களுடன், ஆண்களின் உடலில் காணப்படும் ஒய் குரோமோசோம்களும் அவருடைய உடலில் இருப்பது தெரியவந்தது.

எனவே அவர் அறுவை சிகிச்சையின் மூலம் ஆணாக மாற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சைக்கு தயாரான அவர், உயர் அதிகாரிகளிடம் ஒரு மாதம் விடுப்பிற்கான கோரிக்கை வைத்தார்.

மேலும், அறுவை சிகிச்சைக்கு பின்னர் பணியில் தொடர அனுமதிக்குமாறு கோரினார். ஆனால் இருபாலருக்கும் உடல் தகுதிகள் மாறுவதால் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து லலிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், மகாராஷ்டிரா நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகுமாறு லலிதாவிற்கு உத்தரவிட்டது.

அப்போதைய முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தலையீட்டின் பேரில், வழக்கில் வெற்றி பெற்று 2018 மே மாதம் மும்பையில் உள்ள அரசு நடத்தும் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில், முதற்கட்ட பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

அடுத்த மாதங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட நடவடிக்கைக்குப் பிறகு, 30 வயதான லலிதா புதிய அடையாளத்தையும் லலித் என்கிற புதிய பெயரையும் பெற்றார்.

இந்த நிலையில் ஆண் பொலிஸாராக பணியை தொடர்ந்து வந்த லலித்திற்கு தற்போது, சீமா என்ற 22 வயது இளம்பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

லலித்தின் சட்ட போ ராட்டங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்ட பின்னரே அவரை திருமணம் செய்ய தயாரானதாக சீமா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.