ஹன்சிகாவா இது : அடையாளமே தெரியாமல் மாறிட்டார் பாருங்களேன்!

185

ஹன்சிகா மோத்வானி தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். மும்பையை சேர்ந்த இவருக்கு தற்போது 27 வயதாகிறது. தமிழுக்கு முன்னால் தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தார் ஹன்சிகா.

தமிழில், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, எங்கேயும் காதல், தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே, அரண்மனை, போகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பார்க்க பப்ளியாக குண்டாக இருக்கும் ஹன்சிகாவிற்கு, தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. உடம்பினை சற்று குறைத்து ஹிந்தியில் பெப்பி சாங் ஆடி பார்த்தார், இருந்தும் இவருக்கு வாய்ப்புகள் வரவில்லையாம்.

இதனால் உடனடியாக முடிவெடுத்து, உடம்பினை முற்றிலுமாக குறைத்துள்ளார். தற்போது தமிழில் துப்பாக்கி முனை என்ற படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தற்போது உடம்பினை குறைத்துள்ள இந்த கெட்டப்பில் தான் அந்த படத்தில் நடிக்க போகிறார் ஹன்சிகா. மேலும், இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவாக என வாயை பிளந்துள்ளனர்.