அ டி மேல் அ டி விழுந்தும் சமாளித்த ஆறு மாதக் குழந்தை : கொரோனாவையும் வெல்வாரா?

498

ஆறு மாதக் குழந்தை..

பிறக்கும்போது வெறும் 5 பவுண்டுகள் 4 அவுன்ஸ் எடை கொண்டிருந்த ஒரு பிரித்தானியக் குழந்தை ஏற்கனவே பட்ட பாடு போதாது என்று, கொரோனாவும் அவளைக் குறிவைத்துள்ளது.

Erin Bates என்ற அந்த குழந்தை இதயப் பிரச்சினையுடன் பிறந்ததால், அவளுக்கு open heart surgery செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுபோதாதென்று அவளுக்கு சுவாசக்குழலிலும் பிரச்சினை இருந்தது. நீண்ட சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறி வீடு திரும்பினாள் Erin.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை அவளுக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது அவளது பெற்றோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு நோயாளியுடன் ஒருவர் மட்டுமே இருக்கலாம் என்பதால், Erinஉடன் அவளது தாய் மட்டுமே இருக்க, கொரோனா நோயாளியின் தந்தை என்ற வகையில் Erinஇன் தந்தை Buryயில் உள்ள தன் வீட்டில் தன்னைத்தான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நீண்ட காலம் குழந்தையின்றித் தவித்து, இனி குழந்தை பிறக்காது என்று மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் பிறந்த அதிசயக் குழந்தை Erin, ஏற்கனவே பல பிரச்சினைகளை இந்த ஆறு மாத காலத்திற்குள் சந்தித்து மேற்கொண்டுவிட்ட நிலையில், கொரோனாவையும் அவள் மேற்கொண்டுவிடுவாள் என்று உறுதியாக நம்புகிறார்கள் அவளது பெற்றோர்.

ஆனால், இன்னமும் மக்கள் கொரோனா விதிகளை மதிக்காமல் நடப்பது தங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கும் Erinஇன் பெற்றோர், தங்கள் குழந்தையைப் பார்த்தாவது மக்கள் திருந்தட்டும் என்கிறார்கள்.