இலங்கையில் தயாரிக்கப்பட்ட 200 நோய்களை கண்டறியும் ரோபோ!!

553

நோய்களை கண்டறியும் ரோபோ..

இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள மருத்துவ உதவி வழங்கும் ரோபோ இயந்திரம் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Nextbots என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ இயந்திரத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான பமுதித்த பிரேமச்சந்திர வடிமைத்துள்ளார்.

இந்த ரோபோ இயந்திரத்தினால், 200 நோய்களை அடையாளம் காண முடியும் என்பதுடன் அதற்கான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்க முடியும்.

சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் பதிலளிக்கும் வகையில் இந்த ரோபோ இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ இயந்திரத்தை மேலும் முன்னேற்றி அவசரமான நேரங்களில் மருத்துவ ஊழியர்களில் உதவிக்காக பயன்படுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.