தங்கம் குவிந்து கிடக்கும் கோலார் தங்க சுரங்கத்தில் திருட 1000 அடி ஆழத்துக்குள் இறங்கிய கும்பல் : நேர்ந்த வி பரீதம்!!

605

1000 அடி ஆழத்துக்குள் இறங்கிய கும்பல்..

இந்தியாவில் கோலார் தங்கச் சுரங்கத்தில் 1000அடி ஆழம் உள்ளே இறங்கி தங்கம் திருட ஒரு கும்பல் முயன்ற நிலையில் மூன்று பேர் இதில் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் கோலாரில் உள்ள தங்க சுரங்கத்தில் 1800 களில் , ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தால் தங்கச் சுரங்கங்கள் வெட்டும் பணி துவங்கியது.

இதற்காகப் பெருமளவில் மக்கள் , தமிழ்நாட்டின் வடாற்காடு மாவட்டத்தில் இருந்தும் சித்தூர் மாவட்டத்தில் இருந்தும் வரவழைக்கபட்டனர். இவர்கள் சுரங்கத்திற்கு அருகிலேயே வீடுகட்டித் தங்கியதால் கோலார் தங்க வயல் நகரியம் உருவாகியது. இந்நிலையில் இந்த தங்க சுரங்கத்தில் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டிருக்கிறது.

இதையடுத்து தங்கச் சுரங்கத்தில் 1000அடி ஆழம் உள்ளே இறங்கி தங்கம் திருட கும்பல் முயன்றுள்ளது. அப்போது சுரங்கத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் மயங்கி விழுந்து 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

நள்ளிரவில் 2 பேர் சடலம் மீ ட்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவரின் சடலத்தை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், இறந்தவர்கள் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.