தான் செய்யாத தவறுக்காக 19 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆமை..! உண்மை தெரிந்தால் கண்கள் ஈரமாகிவிடும்..!

512

19 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆமை..

தான் செய்யாத தவறுக்காக ஆமை ஓன்று 19 வருடங்கள் த ண்டனை அனுபவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுதித்துள்ளது.
மனிதர்களின் அன்றாட பழக்கவழக்கம், வாழ்க்கை முறையால் சுற்றுசூழல் மிகவும் பா திக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மனிதர்கள் பயன்படுத்திவிட்டு சாதாரணமாக தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி துண்டுகள், இரும்பு கம்பிகள் போன்றவற்றால் நமது கண்ணனுக்கு தெரிந்தும், தெரியாமலும் எவ்ளவோ உயிர்கள் து ன்பப்படுகிறது,

அந்த வகையில், ஆராய்ச்சியாளர்கள் மிகவும் வித்தியாசமான ஆமை ஒன்றை கடலில் இருந்து மீட்டனர். நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்தத இந்த சம்பவத்தின் போது அந்த ஆமையின் வயது 19. அந்த ஆமையின் உடலில் சிறிய பிளாஸ்டிக் மோதிரம் ஓன்று மாட்டியுள்ளது. அந்த ஆமை பிறந்த சில நாட்களிலையே அந்த மோதிரம் அதன் உடலில் மாட்டப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

யாரோ ஒருவர் அந்த மோதிரத்தை கடலில் தூக்கி வீசும்போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் அந்த ஆமை தனது உடலில் சிக்கியிருக்கும் மோதிரத்தை எடுக்க முயற்சித்திருக்கும். ஆனால், அது முடியமால் போகவே, நாளுக்கு நாள் ஆமை பெரிதாக பெரிதாக, அந்த மோதிரம் ஆமையின் உடலை இ றுக்கியுள்ளது.

தனது உடல் இரு க்கப்பட்ட நிலையில், கடந்த 19 வருடங்களாக அந்த ஆமை எவ்வளவு சி ரமப்பட்டு உயிர் வாழ்ந்திருக்கும்? தற்போது அந்த மோதிரம் து ண்டிக்கப்பட்டு அந்த ஆமை விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்து சில வருடங்கள் ஆகியிருந்தாலும், நாம் செய்யும் த வறுகளால் ஏற்படும் சுற்று சூழல் பாதி ப்பு , அதனால் மற்ற உயிரினங்கள் படும் அ வஸ்தைகளை நாம் புரிந்துகொள்ள இந்த செய்தி மீண்டும் பதிவிடப்பட்டுள்ளது