அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்!!

618

அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் இலங்கை வம்சாவளி தமிழ்பெண் இம்முறை போட்டியிடுகிறார்.

கிரிஷாந்தி விக்னராஜா என்ற இந்த இலங்கை வம்சாவளி பெண் ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவின கொள்கைப்பிரிவு பணிப்பாளராக பணியாற்றினார்

கிரிஷாந்தி விக்னராஜா இலங்கையில் இருந்து 9 மாத குழந்தையாக அமெரிக்காவில் தமது பெற்றோருடன் குடியேறினார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் இம்முறை அவர் போட்டியிடுகிறார்.

நான் ஒரு தாய், நான் ஒரு பெண், நான் உங்களின் அடுத்த ஆளுநராக வரவேண்டும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மேரிலேன்ட்டின் வாக்காளர்கள் இம்முறை பெண் ஒருவரை ஆளுநராக தெரிவுசெய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.