‘செம்பருத்தி’ படப்பிடிப்பு: முதல் நாளிலேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக்-ஷபானா….!

104

கார்த்திக்-ஷபானா…..

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’செம்பருத்தி’ சீரியல் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக செம்பருத்தி உள்பட அனைத்து தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

அந்த வகையில் ’செம்பருத்தி’ சீரியலின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த சீரியலில் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே இந்த சீரியலின் இயக்குனர் ரவிபாண்டியனுக்கு பிறந்த நாள் என்பதால் படப்பிடிப்பு நடைபெறும் பெரிய பங்களாவிலேயே இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இயக்குனர் ரவி பாண்டியன் கேக் வெட்டி நாயகன் கார்த்திக், நாயகி ஷபானா உள்பட அனைவருக்கும் பகிர்ந்தார். படக்குழுவினர், டெக்னீஷியன்கள் என அனைவரும் இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முதல் நாள் படப்பிடிப்பிலேயே கார்த்திக், ஷபானா உள்பட அனைவரும் இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அனுபவித்து மகிழ்ந்தனர். செம்பருத்தி சீரியல் படப்பிடிப்பு தொடங்கி விட்டதால் இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பு தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.