அக்காவையே கொடூரமாக கொன்ற தங்கை: அதிர்ச்சியளிக்கும் பின்னணி காரணம்!!

742

தமிழ்நாட்டில் அக்காவை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில் தங்கை மற்றும் கள்ளக்காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பூபாலன் (28). இவர் மனைவி நதியா (24).பூபாலன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்துக்கு வந்து சொந்த வீடு கட்டி குடியேறியுள்ளார்.

மேலும் பனியன் நிறுவனங்களில் ஒப்பந்தம் எடுத்து தொழிலாளர்களை வைத்து பல்வேறு வேலைகளை செய்து வருவதால் வசதியாக வாழ்ந்து வந்தார்.பூபாலனுடன் அவருடைய தம்பிகள் மணிபாலன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோரும் தங்கி இருந்து வேலை செய்து வந்தனர்.

அதே பகுதியில் நதியாவின் தங்கை முறையான சித்தி மகள் ரேகாவும் (22) வசித்து வந்தார்.இந்நிலையில் கடந்த 14-ம் திகதி காலையில் பூபாலன், அவருடைய தம்பிகள் வேலைக்கு சென்று விட்டனர்.

இரவு மணிபாலன் வீட்டுக்கு வந்த போது வீட்டில் நதியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது நதியா கொலை செய்யப்படுவதற்கு முன்பாக அந்த வீட்டிற்கு நதியாவின் சித்தி மகள் ரேகா வந்தது தெரியவந்தது.

பின்னர் பொலிசார் ரேகாவிடம் விசாரித்த போது நதியாவை, தனது கள்ளக்காதலன் நாகராஜ் மூலம் கொடூரமாக கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.ரேகா அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.நாகராஜூடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு தெரிந்து என் கணவர் என்னை பிரிந்துவிட்டார்.2 ஆண்டுகளுக்கு முன்பு தான் என் அக்கா நதியா விட்டருகே குடி வந்தேன்.

அப்போது தான் அவர் கணவர் பூபாலன் வசதியாக இருப்பதை அறிந்து கொண்டேன்.இதையடுத்து பூபாலன் நட்பை நெருக்கமாக்கி கொண்டு என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறினேன்.அதற்கு அவர் விரைவில் என்னை திருமணம் செய்வதாக் கூறினார்.

இருப்பினும் பூபாலனின் மனைவி நதியா உயிரோடு இருந்தால், தன்னால் பூபாலனுடன் நெருக்கமாக இருக்க முடியாது என்று உணர்ந்து கள்ளக்காதலன் நாகராஜூடன் சேர்ந்து நதியாவை கொல்ல முடிவு செய்தேன்.

பின்னர் அவர் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த நதியாவின் குழந்தையை வெளியில் எடுத்து கொண்டு வந்தேன்.இதையடுத்து வாசலில் இருந்த நாகராஜ் உள்ளே சென்று நதியாவை கழுத்தை அறுத்து கொலை செய்து செய்தார் என கூறியுள்ளார்.இதையடுத்து ரேகா மற்றும் நாகராஜை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.