பிரபல தமிழ் திரைப்பட நடிகரின் மகன் திடீர் மரணம்!!

180

மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மூத்த மகனான பாலாஜி ரவிச்சந்திரன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் 1964-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் ரவிச்சந்திரன்.
இவர் ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ரவிச்சந்திரனுக்கு பாலாஜி, அம்சவர்தன் என்ற இரு மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.
இதில் அம்சவர்தன் தமிழ் திரையுலகில் நடிகராக உள்ளார்.

மூத்தவரான பாலாஜி தொழில் செய்து வந்த நிலையில் சமீபகாலமாக சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் பாலாஜி காலமானார், உயிரிழந்த பாலாஜிக்கு மனைவியும், மகனும் உள்ளனர்.