இறந்துபோன மகனின் விந்தணுவை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுத்த தாய்!!

1247

புனேவை சேர்ந்த பெண்மணி ஒருவர் இறந்துபோன தனது மகனின் விந்தனுவை பயன்படுத்தி பேரக்குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

ராஜஸ்ரீ என்பவரது மகன் பிரதமேஷ் ஜேர்மனியில் மாஸ்டர் டிகிரி படித்துவந்தபோது, கடந்த 2010 ஆம் ஆண்டு அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

இதனால் பிரதமேஷ்க்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னர் பிரதமேஷ்ஷின் விந்தணுக்கள் ஜேர்மன் வங்கியில் சேகரித்து வைக்கப்பட்டன.

புற்றுநோயின் தாக்கம் நான்காம் கட்ட நிலையில் இருந்த காரணத்தால், பிரதமேஷ்க்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கண்பார்வை பறிபோய், வலிப்பு பிரச்சனையும் பிரதமேஷ்க்கு ஏற்பட்டது. இருப்பினும் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்ட வந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளால் பிரதமேஷ்ஷால் வாழ முடிந்தது.

தொடர்ந்து ஆறு ஆண்டுகள் தனது புற்று நோயுடன் போராடி வந்தார் பிரதமேஷ். கடைசியில், கடந்த 2016 செப்டம்பர் மாதம் மீண்டும் ஒருமுறை வலிப்பு வந்தது.

அதன் பின்னர், மீண்டும் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து மரணம் அடைந்தார். இதற்கிடையில் மகனை இழந்து தவித்த ராஜஸ்ரீ, ஜேர்மனியில் சேமித்து வைத்திருந்த மகனின் விந்தணுவின் உதவியோடு குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி ஜேர்மன் வங்கியை தொடர்பு கொண்டு, மகனின் விந்தை எடுத்து வந்தார். மேலும், அந்த விந்து மூலம் வாடகை தாயாக மாறி, இரட்டையர் குழந்தைகள் பெற்றெடுத்தார் ராஜஸ்ரீ பாட்டில்.

தனது பேரக்குழந்தைகள் கையில் கிடைத்துவிட்டதால் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் ராஜஸ்ரீ.