100 வயதிலும் சேலை வியாபாரத்தில் அசராது உழைக்கும் பாட்டி.. பூரித்துபோன குடும்பம்..!

376

100 வயதிலும் சேலை வியாபாரத்தில்……..

மும்பையில் வசிக்கும் கேரள பாட்டியான பத்மாவதி நாயர்(100) என்பவர் தன் கைகளால் புதுபுது வகையான டிசைன் சேலைகளை உருவாக்கி அசத்தி வருகிறார்.

100 வயதை எட்டியுள்ள இந்த பாட்டி, மற்றவர்களுக்கு நம்பிக்கையும், உத்வேகத்தையும் அளிக்கிறார். இதுபற்றி பேசிய அவர், “எப்போதும் பிஸியாக இருங்கள். மற்றவர்களுடைய பி ரச்னைகளில் தலையீடாதீர்கள்”.

தினமும் மூன்று மணி நேரம் வேலை என்பதை இலக்காக வைத்துள்ளார். அதற்குள் அவருக்கான அன்றைய பணிகளை முடித்துவிடுகிறார். “எனக்கு ஓவியங்கள் வரைவதில் திருப்தி கிடைக்கிறது” என்கிறார்.

மேலும், நூறு வயதில் பத்மம் பாட்டி உருவாக்கும் டிசைனர் சேலைகள் அதிக நேரத்தையும் உழைப்பையும் எடுத்துக் கொள்ளக்கூடியவை. அனைத்தும் நுணுக்கமாக செய்யவேண்டிய அழகியல் வேலைப்பாடுகள்.

ஆனால் அவரால் டிசைன் செய்யப்பட்டு உருவாக்கப்படும் சேலைகள் தரத்தில் உயரத்தில் இருக்கின்றன. முதலில் அவுட்லைன் செய்து, அதனை வண்ணங்களால் நிரப்புகிறார். பலதரப்பட்ட துணி வகைகளைக் கொண்ட சேலைகளிலும் ஓவியங்கள் தீ ட்டுகிறார். “துஸார் சில்க்கில் பணியாற்றுவதுதான் கொஞ்சம் ச வாலானது” என்கிறார்.

ஒரு சேலையை முடிப்பதற்கு ஒரு மாதம்கூட செலவாகும். டிசைனர் சேலை விற்பனையில் வரும் பணத்தை தன்னுடைய பேரன் பேத்திகளுக்காகச் செலவிடுகிறார். தனக்காக எதையும் அவர் வைத்துக்கொள்வதில்லை என்று நெகிழ்ந்து பேசுகிறார் அவருடைய மகள் லதா.

இந்தப் பாட்டி தயாரிக்கும் ஒரு சேலையின் விலை ரூ. 11 ஆயிரம். துப்பட்டாவின் விலை ரூ. 3 ஆயிரம். அதுவும் சேலை விலையுடன் உள்ளடக்கியதுதான். தான் உருவாக்கிய முதல் டிசைனர் சேலையை அப்படியே நினைவாகவும் வைத்திருக்கிறார்.

இவர், திருச்சூர் வடக்கன்சேரியில் பத்துக் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் ஒன்பதாவதாகப் பிறந்தார் பத்மம். இளமைப்பருவத்தை கேரளத்தில் கழித்த அவர், திருமண வாழ்க்கைக்குப் பிறகு மும்பைக்கு வந்துவிட்டார்.

தன்னுடைய ஐந்து குழந்தைகள் வளரும்போதே, சேலையில் ஓவியங்கள் தீட்டும் ஆர்வத்தையும் கூடவே வளர்த்துக்கொண்டார். ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்குத் தேவையான குர்தா, பைஜாமா போன்ற ஆடைகளை தயாரித்துக் கொடுத்தார். இன்று அவர் எள்ளுப் பேரன் பேத்திகளையும் பார்த்துவிட்டார். அழகிய கைவேலைப்பாடுகள் கொண்ட சேலைகளை அவர் உருவாக்கத் தொடங்கியது குடும்பம் செட்டிலான பிறகுதான். “ஆரம்ப நாட்களில் சிறிய அளவில் என் மகளுக்குச் செய்துவந்தேன். அவள்தான் எனக்கான ஊக்கமாக அமைந்திருந்தாள்” என்கிறார்.

அறுபது வயதில் தொடங்கிய ஒரு பொழுதுபோக்கு, 100 வயதில் அவரது அடையாளமாக மாறியிருக்கிறது. மேலும், நான் நூறு வயதில் ச ம்பாதிக்கக்கூடாதா? என்று சிரித்துக்கொண்டே கேட்கும் பத்மம் பாட்டி ச மூகவலைதளங்களில் பு குந்து விளையாடுகிறார்.