நம்ம இடத்தை பிடிச்சிடுவாளோ?: வாரிசு நடிகையை பார்த்து லைட்டா பயப்படும் சர்ச்சை நடிகை!

156

வாரிசு நடிகையின் அபார நடிப்பை பார்த்து சர்ச்சை நடிகை லைட்டா பயத்தில் உள்ளாராம். நல்லா நடிக்கும் கதாபாத்திரமா கூப்பிடுங்கப்பா சர்ச்சை நடிகையை என்று கோலிவுட்டில் கூறுகிறார்கள். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களும் அவரை தேடித் தான் செல்கின்றன.

இந்நிலையில் தான் வாரிசு நடிகையின் படம் ரிலீஸாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிப்பு வாரிசு நடிகைக்கு நடிப்பே வரவில்லை என்று கூறி கைதட்டி சிரித்தவர்கள் கூட தற்போது அவரின் நடிப்புத்திறமையை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து சர்ச்சை நடிகைக்கு லைட்டா பயம் வந்துள்ளதாம்.

இளம் ஹீரோக்களுடன் நடித்தால் அக்கா போன்று இருக்கிறார் என்று சர்ச்சை நடிகை பற்றி விமர்சனம் உள்ளது. வாரிசு நடிகைக்கு வயது இருப்பதால் இனி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் அவருக்கு போய்விடுமோ என்று சர்ச்சை நடிகைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பார்க்கலாம் இத்தனை படத்தில் சொதப்பியிருக்கிறார், ஒரு படத்தில் தானே நடித்துள்ளார்.

அடுத்த படம் வரட்டும் பார்க்கலாம் என்று தன்னை தானே தேற்றிக் கொண்டாலும் தன் இடம் பறிபோய்விடுமோ என்ற அச்சம் உள்ளது சர்ச்சை நடிகைக்கு. விருப்பம் நடிக்கத் தெரியவில்லை என்று பலரும் சிரித்தபோதே சர்ச்சை நடிகையின் இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் வாரிசு நடிகை. தற்போது சொல்லவா வேண்டும்? என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.