சபாஷ் சரியான போட்டி: ஒல்லியை துரத்தும் டிவி நடிகர்!

160

டிவி நடிகர் ஒல்லி நடிகரின் பாணியில் புதுப்புது அவதாரங்கள் எடுத்து வருகிறார். டிவி நடிகரும், ஒல்லி நடிகரும் அண்ணன் தம்பியாக பழகியது ஒரு காலம். தற்போது அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை இல்லை. இந்நிலையில் டிவி நடிகர் புது அவதாரம் எடுத்துள்ளார். சர்ச்சை நடிகை நடித்து வரும் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார் டிவி நடிகர்.

பாடல் ஆசிரியர் ஒல்லி நடிகரை போன்று முதலில் தயாரிப்பாளர் ஆனார் டிவி நடிகர். தற்போது பாடல் ஆசிரியர் ஆகியுள்ளார். அடுத்து அவர் ஒல்லியின் வழியில் பாடகர், இயக்குனர் அவதாரம் எடுப்பாரோ? புது நடிகர் டிவி நடிகர் தன்னை பிரிந்து சென்று வேகமாக வளர்ந்து தன்னை விட மார்க்கெட் அதிகம் வைத்துள்ளதை பார்த்த ஒல்லி அவர் வந்த அதே டிவியில் இருந்து மற்றொரு நடிகரை ஹீரோவாக்கியுள்ளார்.

சபாஷ் ஒல்லி புதிதாக ஒரு டிவி நடிகரை பிடித்து வளர்த்துவிடும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் டிவி நடிகரோ ஒல்லியின் வழியை பின்பற்றி பாடல் ஆசிரியராகியுள்ளார். இருவருக்கும் இடையே சரியான போட்டியாகத் தான் உள்ளது. விரோதம் இல்லை ஒல்லி நடிகர் கழற்றிவிட்ட ஒல்லி இசைக்கும், டிவி நடிகருக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்டது. ஆனால் டிவி நடிகர் பாட்டு எழுதியிருப்பதே ஒல்லி இசையின் படத்திற்கு தான். அவர்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை.