ரெய்னா மகள் பிறந்தநாளுக்கு பாட்டுப்பாடி அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்!!

129

சுரேஷ் ரெய்னா மகள் கிரேஸியா பிறந்த நாள் விழாவில் சிஎஸ்கே வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிஎஸ்கே அணியில் விளையாடி வரும் தோனி, சுரேஷ் ரெய்னாவின் நட்பு எல்லோரும் அறிந்ததுதான். அந்த நட்பு வட்டத்தில் புதிதாக இணைந்திருப்பவர் ஹர்பஜன் சிங். இவர்களைப் போலவே இவர்களின் பெண் குழந்தைகளும் நட்பாகி வருக்கிறார்கள்.

தோனி மகள் ஸிவா, ரெய்னா மகள் கிரேஸியா, ஹர்பஜன் மகள் ஹினயா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து விளையாடி வருகின்றனர். சென்னை அணி போட்டி நடைப்பெறும் மைதானத்தில் சுரேஷ் ரெய்னா மனைவி பிரியங்கா, ஹர்பஜன் சிங் மனைவி கீதா பஸ்ரா, கேப்டன் தோனி மனைவி சாக்‌ஷி ஆகியோர் தங்கள் மகள்களுடன் வந்து செல்லமாக விளையாடி போட்டியை ரசிக்கிறார்.

2018 ஐபிஎல் தொடங்கியது முதல் அவ்வப்போது வெளியாகும் கிரேஸியா மற்றும் ஸிவா ஆகியோரின் வீடியோகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ரெய்னாவின் மகள் கிரேஸியாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக சிஎஸ்கே வீரர்கள் கொண்டாடி உள்ளனர். அதில் கேப்டன் தோனி, பிரவோ, ஜடேஜா ஆகியோர் கலந்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துக் கொண்ட அவ்விழாவில், பிரவோ பாடல் பாடியதுதான் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரெய்னா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கிரேஸியா இரண்டு வயதை பூர்த்தி செய்துவிட்டார். என்னால் நம்பவே முடியவில்லை எப்படி இவ்வளவு விரைவாக வளர்ந்து விட்டாள். அவளுக்கு மிகச் சிறந்த பிறந்த நாளாக இதை மாற்றிய எல்லோருக்கும் நன்றி, குறிப்பாக கிரேஸியா மற்றும் பிரியங்காவுக்கும் என பதிவிட்டுள்ளார்.