இந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்!!

1422

அரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்ளரளி ஆகிய இரு வகைகள் உள்ளது.

இச்செடியின் மலர் மாலைகளைக் கோவில்களில் தெய்வ உருவங்களுக்குச் சார்த்துவார்கள்.

செவ்வாய்க் கிழமையில் முருகன், சக்தி மற்றும் வீரபத்திரர் ஆகிய கடவுளின் சிலைக்கு செவ்வரளி மலரை அணிவித்து அனுகிரகம் பெறுவார்கள்.

இந்த செவ்வரளி மலரானது பரிகாரத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியது. இம்மலரை நீங்கள் எந்த தெய்வத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தாலும் காரணம், காரியமின்றி பயன்படுத்தக் கூடாது.

அதாவது தோஷம் கழிக்கவோ, பகை தீரவோ, திருஷ்டி கழிக்கவோ, பிரச்சனை தீரவோ இது போன்று ஏதாவது பரிகாரமாக இருக்க வேண்டும்.

செவ்வரளி செடியை வீட்டில் வளர்க்கலாமா?
செவ்வரளி செடியை வீட்டில் வைத்து வளர்க்கக் கூடாது. ஏனெனில் அது வனத்தில் மட்டுமே இருக்க வேண்டிய செடியாகும்.

அதுவும் இச்செடியின் காற்று அடிக்கடி நம்மீது பட்டால் நம்முடைய செல்வ செழிப்பை இழக்க நேரிடுமாம்.