இன்றைய ராசிபலன் (22-09-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

75

இன்றைய ராசிபலன்……..

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் மந்தமாக காணப்படும். எடுக்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் செல்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப் பெறும். ராகு கேது வழிபாடு செய்து வாருங்கள் நல்லது நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய அற்புதமான அமைப்பு என்பதால் மனதில் மகிழ்ச்சி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்தபடி சலுகைகள் கிடைக்க பெறும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கப் பெறும். துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள் மன அமைதி பிறக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெருமையும் புகழும் கிடைக்க கூடிய அமைப்பு என்பதால் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உங்கள் திறமைக்கு ஏற்ப பல வாய்ப்புகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயத்தில் கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். சூரிய பகவானை வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யார் வம்பு தும்புக்கும் போகாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது மிகவும் நல்லது. கிரக அமைப்புகள் சாதகமற்று இருப்பதால் பயணங்களின் பொழுது கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை குறைந்தாலும் விரைவாக ஒன்று கூடிவிடுவார்கள். முருகனை வணங்குங்கள் நன்மை நடைபெறும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த என்னால் கவனமுடன் இருக்க வேண்டிய அமைப்பாக இருக்கிறது.எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் ஒரு முறைக்கு பலமுறை தீர்க்கமாக யோசித்த பின் முடிவெடுப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தாமத பலன் உண்டாகும். ஒரு சிலருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை உண்டாக்கும். நவக்கிரகங்களை வழிபட நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் அதிகம் நடைபெறக் கூடிய அற்புதமான அமைப்பு என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. எதிர்பாராத தனவரவு வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய சுலபமாக அமைத்துக் கொடுக்கும். இறைவன் உங்களுக்கு ஒரு கதவை அடைத்தால் மறு கதவு திறந்து வைக்கும் படியான சூழ்நிலையை உருவாக்கி விடுவார். இதனால் கவலை கொள்ளத் தேவையில்லை. சிவ வழிபாடு செய்து வாருங்கள் நன்மைகள் நடைபெறும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப் பெரிய பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். உடல்நிலை பாதிப்புகள் படிப்படியாக சீராகும். எனினும் ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். விநாயகர் வழிபாடு செய்துவர நல்லது நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தர கூடிய அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயத்தில் உடன் இருப்பவர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் வழியே சாதகமான பலன் உண்டு.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் வருகையால் அவர்களின் ஆதரவால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெண்கள் தெய்வீக காரியங்களில் நாட்டம் அதிகம் செலுத்துவார்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான அமைப்பாக இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளின் தொந்தரவுகளை சந்திக்க நேரும். சிவ வழிபாடு மன அமைதி தரும்.

மகரம்

மகர ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பெறக்கூடியதாக இருக்கும். தொழில் ரீதியான போட்டி, பொறாமைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான சண்டை சச்சரவுகள் குறையக் கூடிய வாய்ப்புகள் அமையும். சனி பகவான் வழிபாட்டை மேற் கொள்வதால் நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற பிரச்சனைகள் மன சங்கடத்தை உருவாக்கும் என்பதால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. வெளியில் வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு கூட்டாளிகள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும் என்பதால் உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. சண்டிகை வழிபாடு மேற்கொள்ளுங்கள் மன அமைதி பிறக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் தாய் வழி உறவினர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு இலாபகரமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்க பெறும். பைரவர் வழிபாடு செய்யுங்கள் கடன் சுமை குறையும்.