இன்றைய ராசிபலன் (23-09-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

99

இன்றைய ராசிபலன்……..

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. வரவே வராது என்று நினைத்த பழைய பாக்கிகள் வசூலாகி வாய்ப்புகள் உண்டு. குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த படி லாபங்கள் கிடைக்கும். உங்களால் முடிந்தவர்களுக்கு ஆடை தானம் செய்து வர நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக அமைய இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான நெருக்கடிகள் நீங்கும். ஒரு சிலருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் வந்து நீங்கும். உங்களால் முடிந்தவர்களுக்கு புத்தக தானம் செய்து வர நன்மைகள் நடக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முயற்சிகள் வெற்றி தரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான விசயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகள் வழியே வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான விஷயத்தில் தடை தாமதம் ஏற்பட்டாலும் வரவேண்டிய பணம் வந்துசேரும். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து வாருங்கள் நல்லது நடக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்பட கூடிய அற்புதமான நாளாக அமைய இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் வர வேண்டிய பணம் கைக்கு வருவதில் தடைகள் ஏற்படலாம். கத்திய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு கூடுதல் எச்சரிக்கை தேவை. அரசாங்க ரீதியான விஷயத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அன்னதானம் செய்ய மன அமைதி கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. இதுவரை உங்கள் உதவி தேவைப் படாதவர்களுக்கு கூட தேவைப்படும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையேயான மனக்கசப்புகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கப் பெறலாம். குலதெய்வத்தை வேண்டினால் நல்லது நடக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிலுவையில் இருந்த கடன் தொகையை வசூலிக்கும் விஷயத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பிள்ளைகளின் வேலை விஷயத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. விநாயகர் அகவல் படியுங்கள் நன்மை பிறக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான அமைப்பு என்பதால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இதுவரை உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர கூடிய வாய்ப்புகள் அமையும். நண்பர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கப் பெறும். பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் நன்மை நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. சிறு சிறு விஷயங்களுக்கு கூட உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்புகள் அமையும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. அரசு வழி காரியங்களில் சாதகமான பலன்கள் தரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களை திருப்பி கொடுத்து விடுவீர்கள். பறவைகளுக்கு உணவு வைத்தால் நல்லது நடக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்பட கூடிய நாளாக இருக்கும். எடுத்த காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் கூட வெற்றி கிடைக்கும். சகோதர சகோதரிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. சுயதொழில் செய்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்படலாம். ஆஞ்சநேயரை வணங்கி வர நன்மைகள் நடக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் கவனமாக இருப்பது நல்லது. வாகன ரீதியான பயணங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களின் உடல் நலம் குறித்த விஷயங்களில் கூடுதல் கவனம் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் கைகூடி வரும். ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள் மன அமைதி பிறக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கூடுமான வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையேயான சண்டை சச்சரவுகள் நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமைய வாய்ப்புகள் உண்டு. கடன் தொகைகள் படிப்படியாக குறையும். இயலாதவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்கள் நல்லது நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை இருந்து வந்த குடும்பப் பிரச்சினைகள் காணாமல் போய் விடும் வாய்ப்புகள் அமையும். உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டு. ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் மன அமைதி பிறக்கும்.