இன்றைய ராசிபலன் (26-09-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

89

இன்றைய ராசிபலன்……….

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்தபடி எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாக்கூடும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வருமானம் உயரும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்களிடம் உங்களின் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேசுவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான சிக்கல்களை தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உடன் இணக்கமாக செல்வது அனுகூலமான பலன்களை தரும். பெண்களுக்கு வேலைப்பளு காரணமாக சிறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வளவு கஷ்டமான காரியங்களையும் மிக சுலபமாக செய்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு தங்கள் திறமைக்கு ஏற்ப நல்ல வேலை கிடைக்கும்.

கடகம்

கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத சில விஷயங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய முதலீடுகள் செய்வதில் லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் சிறுசிறு வாக்குவாதங்களில் ஈடுபட நேரலாம். தேவையற்ற அலைச்சலும் டென்ஷனும் காணப்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டு.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் பேசி உணர்ச்சிவசப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். அதிகம் பொறுமை காப்பது நல்லது. உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய உத்திகள் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் ஊதிய உயர்வு, சலுகைகள் போன்றவற்றில் சாதகமான பலன்கள் காணலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சகோதர சகோதரிகளுடன் இணக்கமாக செல்வதன் மூலம் சாதகமான பலன்களை அடையலாம். வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். உத்தியோகத்தில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற செலவுகளை எதிர்கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியான சிக்கல்களை எளிதாக சமாளிக்க முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் உடன் இருக்கும் நண்பர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களைக் காண்பீர்கள். இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் சமாளிக்க சிரமப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் மதிப்பும் மரியாதையும் உயர்வதை காண்பீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. எந்த விஷயத்திலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது தான் நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். புதிய நபர்களை நம்பி புதிய விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் பணிச்சுமை காரணமாக டென்ஷனுடன் காணப்படுவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். முக்கிய பொறுப்புகளில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் சக பணியாளர்கள் மூலம் சில தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரலாம். பிள்ளைகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. மன அமைதி பெற முருகப்பெருமானை வழிபடுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பெறுவீர்கள். பொருளாதார ரீதியான சிக்கல்கள் அதிகரித்தாலும் திறம்பட சமாளித்து விடுவீர்கள். வங்கி சேமிப்பு குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுபகாரிய முயற்சிகள் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இல்லை என்றாலும் வருமானம் சீராக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பான விஷயங்களை தள்ளிப்போடுவது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் தேவையில்லாத அலைச்சல் காரணமாக டென்ஷன் ஏற்படலாம். பயணங்களின்போது கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் முன்னேற்றத்தை பெருக்கிக் கொள்ள முடியும். பைரவர் வழிபாடு செய்யுங்கள் கடன் பிரச்சனைகளை தீர்க்கும்.