இன்றைய ராசிபலன் (28-09-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

108

இன்றைய ராசிபலன்….

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வாக இருக்கும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயலாற்றுங்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் வர இருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெண்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடி வரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் கவனத்துடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். பயணங்களின் பொழுது தங்களின் உடைமைகளையும், பணத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் லாபத்தில் குறைவிருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை நிலவும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். கடன் தொகைகள் படிப்படியாக குறையும் வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக முதலீடுகள் செய்ததில் சிறப்பான லாபம் காண முடியும். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு ஏற்றகரமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத திடீர் அலைச்சல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு இலாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக அமைய இருக்கிறது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற்றும் அற்புதமான நாள் என்று கூறலாம். நினைத்த காரியங்கள் தடை தாமதங்கள் இன்றி கைகூடி வரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்த்துக்கொள்வது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேசும் பொழுது கவனமாக இருப்பது நல்லது. பேச்சில் கோபத்தை குறைத்துக் கொண்டு பேசுவது நல்லது. கணவன் மனைவி இடையேயான உறவு சிக்கலில் இருந்து மீளும். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருளாதார சிக்கல்களை சமாளிப்பீர்கள். வெளியூர் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

கன்னி

கன்னி ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்வதன் மூலம் நிம்மதி காணலாம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் ரீதியான போட்டி பொறாமைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொழில் ரீதியான போட்டி பொறாமைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உத்யோகத்தில் மேலதிகாரியுடன் இணக்கமாக செல்வது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயத்தில் ஏமாற்றம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. மன தைரியத்துடன் வைத்துக்கொள்வதற்கு யோகா தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் காணலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையேயான உறவு சுமூகமாக இருக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற நண்பர்களின் வருகையால் பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. தொழில் ரீதியான போட்டி பொறாமைகள் வலுப்பெற சந்தர்ப்பங்கள் அமையும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் லாபம் காணலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல முன்னேற்றம் காணக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கலைத்துறை மற்றும் பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்கப் பெறும். தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்து காணப்படும். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதாரப் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. தேவையில்லாத சிக்கல்களில் ஏற்படுவதற்கு உங்கள் நம்பிக்கைக்கு உரியவரே காரணமாக இருக்கலாம். எந்த காரியத்தை செய்வதாய் இருந்தாலும் தீர்க்கமாக சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்யோகத்தில் மேலதிகாரியுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் பொருளாதார சூழ்நிலையை சமாளிக்க போராட்டம் தேவைப்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நண்பர்களின் ஒத்துழைப்பால் மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்படும். பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபடுவது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் தடை இன்றி செய்யலாம். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வதன் முன் யோசனை தேவைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.