இன்றைய ராசிபலன் (19-10-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

291

இன்றைய ராசிபலன்………….

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. உற்றார் உறவினர்களின் ஆதரவு உற்சாகத்தை தரும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை பொறுமையை கையாள்வது நல்லது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு அசதி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேசும் பேச்சில் நிதானமும் அமைதியும் தேவை. உடலில் உஷ்ண பாதிப்புகளும் வயிறு தொடர்பான பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைக் கூடி வரும் யோகம் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை இருந்தாலும் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் மனைவிக்கு தெரியாமல் எதையும் செய்யாமலிருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சில தொந்தரவுகள் ஏற்பட்டு செலவுகள் செய்ய நேரும் அபாயம் உண்டு.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சல் அதிகரிக்கக் கூடிய அற்புதமான நாளாக இருக்கும். எதிர்வரும் துயரங்களை தன்னம்பிக்கையுடன் கையாளுவீர்கள். நீண்டகால நண்பர் ஒருவரை சந்திக்க நேரலாம். பெண்களுக்கு வேலை பளு காரணமாக அசதி ஏற்படும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் சில தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியான முன்னேற்றம் நன்றாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தாய்வழி உறவினர்கள் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். ஆரோக்கியத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கள் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் உங்களுடைய பொறுப்புகளை சரிவர செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியான விஷயத்தில் புதிய முயற்சிகள் பலன் தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்குஇன்றைய நாள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வருவது நல்ல பலன் தரும். குடும்பத்தில் இருக்கும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. எதையும் நேர்மையுடன் செய்ய நினைக்கும் உங்கள் ராசிக்கு எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் தரும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் சக நண்பர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். தொழில் ரீதியான முன்னேற்றம் மந்த நிலை காணப்பட்டாலும் பிரச்சனைகள் குறையும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முகத்தில் புன்னகையுடன் இருப்பீர்கள். கவலைகள் நீங்கி உற்சாகம் தரக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய எதிரிகள் யார் என்பது புலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் இடையில் நன்மதிப்பு உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விவகாரங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய வேலைகளை மட்டும் செய்து கொண்டிருப்பது நல்லது. அடுத்தவர்களின் பிரச்சனைகளில் மூக்கை நுழைத்தால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் இழக்க நேரிடும். தொழில் ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க நண்பர்களின் உதவியை நாடலாம். தாய்வழி உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் அமைப்பாக இருப்பதால் குதுகலத்துடன் காணப்படுவீர்கள். பெண்களுக்கு நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய நாளாக அமையும். விரும்பிய பொருள் ஒன்று கைக்கு கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சொல்ல செய்திகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமைய இருப்பதால் சிறப்பான அமைப்பாக இருக்கிறது. தொழிலாளர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. உத்யோகத்தில் பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் மூன்றாம் நபரை நம்பி செயல்படாமல் இருப்பது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு மேற் கொள்வது அவசியமாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி சில முடிவுகளை எடுக்க நேரிடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். உங்களுடைய விடாமுயற்சிக்கு வேலையில் சிறப்பான அங்கீகாரம் கிடைக்க கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்றங்கள் சந்திக்கக் கூடிய அமைப்பாக இருப்பதால் பண வரவிற்கு தடை இருக்காது. புதிய முயற்சிகளில் அவசரப்படாமல் இருப்பது நல்லது. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும்.