இன்றைய ராசிபலன் (21-10-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

315

இன்றைய ராசிபலன்…………

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எந்த காரியத்தையும் இப்படி செய்யலாமா அல்லது அப்படி செய்யலாமா என்கிற குழப்பத்துடன் முடிவெடுக்காதீர்கள். ஒரு முறைக்கு நூறுமுறை ஆலோசித்து யோசனை செய்து முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பயணங்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் தோன்றி மறையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரியும் பணியாளர்கள் நம்பிக்கைக்கு உரிய விதமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு மற்றவர்களின் பாராட்டு கிடைக்கப்பெறும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியுடன் இருக்க வேண்டியதாக இருக்கும். குடும்பத்திலும் உங்களுடைய மனதிலும் அமைதி ஏற்படுத்திக் கொள்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியான பகைவர்கள் நீங்கும் சாத்தியக்கூறு உண்டு.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுப காரியங்கள் நடக்க கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சக நண்பர்களும் உற்றார் உறவினர்களும் உங்களிடமிருந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ளும் அளவிற்கு நீங்கள் முன்னேறுவீர்கள். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தவேண்டிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வாகன ரீதியான விஷயங்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்கள் கைகூடி வரும். உற்றார் உறவினர்கள் வழியில் நல்ல தகவல்கள் வந்துசேரும். சகோதர சகோதரிகள் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்துக்கொண்டிருக்கும் மாற்றங்கள் தடங்கலின்றி சாதகமாக மாறும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் அவசர முடிவுகளை தவிர்க்கவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய வாய்ப்புகள் வீடு தேடி வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. வரும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நல்ல முன்னேற்றம் காணமுடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சக பணியாளர்கள் மூலம் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நல்லது காணலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பாய் பேச்சை தாண்டி செயலில் நீங்கள் சொல்லி அதை நடத்திக் காட்ட முற்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டு. இறைவழிபாடு மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். சமுதாயத்தில் உங்களுக்கு இருந்து வந்த மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. வியாபார ரீதியான முன்னேற்றம் நல்ல விருத்தி பெறும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்றைய நாள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது மிகவும் நல்லது.நீங்கள் நல்லது செய்யப்போய் அதுவே உங்களுக்கு சாதகமாக முடியக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை தவிர்த்துக் கொள்ளவும். பெண்களுக்கு கணவனுடன் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பயணங்கள் மூலம் பணவரவு உண்டாகும். எதிர்பாராத விஷயங்கள் நடைபெறக் கூடிய அற்புதமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. பெண்கள் நினைத்த காரியத்தை நடத்தி காட்டுவீர்கள். கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை நிலவும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் தோன்றி மறையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வெற்றிகள் மன மகிழ்ச்சி உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் உங்களுடைய நாணயத்தைக் காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். நேர்மையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் உங்களுக்கு நல்லதெல்லாம் நடக்கும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றி தரும். திட்டமிடாத காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்து வந்த குடும்பப் பிரச்சினைகள் தொழில் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். சக தொழிலாளர்கள் மூலம் புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடுவீர்கள். அவர்களின் ஆதரவை தைரியத்தை வரவழைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.