ஏழு வருடங்களாக மாடல் அழகியை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தொழிலதிபர்!! கண்கலங்க வைக்கும் சம்பவம்!!

806

வியாசெஸ்லவ் எனும் தொழிலதிபர் நடாஷா செரிப்ரி என்னும் மாடல் அழகியை ஏழு வருடமாக செக்ஸ் அடிமையாக வைத்திருந்தாக கூறப்படுகிறது.

25 வயதான நடாஷா கடந்த ஏழு வருடங்களில் தினமும் வியாசெஸ்லவால் கொடுமைக்கு ஆளாகியுள்ளார். சரியான உணவு இன்றி 38 கிலோ உடல் எடை அளவாக குறைந்துள்ளார். ஒருவழியாக அந்த நபரிடம் இருந்து தப்பி வந்தாலும் கூட இன்றும் உடல் எடை குறைவு மற்றும் அச்சம் சார்ந்த பிரச்சனைகளை கடந்து வருவதாக நடாஷா மனம்வருந்துகிறார்.

மேலும், அந்த கொடூரனிடம் இருந்து தப்பி வந்த போது, நடாஷாவின் இடுப்பு, மார்பக, விரல் எலும்புகளில் முறிவுகளும், சில உடல் உறுப்புகள் கடுமையான பாதிப்பு, மற்றும் மலக்குடல், குதவாய் பகுதிகளில் கிழிசல், தலையில் காயங்களும் கொண்டிருந்தார் நடாஷா என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நடாஷா தன் 18 வயதில் அந்த கொடூரனிடம் சிக்கியுள்ளார். அவன் நடாஷாவை விட முப்பது வயது மூத்தவர். சிக்கிய முதல் ஒரு மாதம் அடித்து துன்புறுத்தி வருந்திருக்கிறான். துன்புறுத்தலால் இரத்தப் போக்குக்கு ஆளானாதல் இரத்த சோகை பிரச்சனைக்கும் ஆளாகியுள்ளார்.

ஏழு வருடங்கள் கொடுமை அனுபவித்த நடாஷா கடந்த பிப்ரவரி மாதம் தான் அந்த கொடூரனிடம் இருந்து தப்பி வந்துள்ளார்.

வியாசெஸ்லவ் துருக்கியில் வாழ்ந்து வந்தவன். இவன் அங்கே பலதாரமணம் செய்தவன் என்றும் அறியப்படுகிறது. பிறகு, ரஷ்யாவிற்கு இடம்பெயர்ந்துள்ளான் வியாசெஸ்லவ். நடாஷாவை கடத்திய பிறகு அவரிடம் இருந்து மொபைல் மற்றும் சமூக தொடர்பை துண்டித்திருக்கிறான் வியாசெஸ்லவ். மேலும், நடாஷாவை இரண்டு குழந்தைக்கு தாயாக்கிய இவன், மகள்கள் முன்னரே நடாஷாவை அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறான்.

மாடலிங் துறையில் நடாஷா வளர்ந்து வந்த காலத்தில், அவரிடம் மிகவும் பரிவாக, அன்பாக பேசி பழகி இருக்கிறான் வியாசெஸ்லவ். போலி நாடகத்தை நம்பி ஏமார்ந்த நடாஷாவை முதல் ஒரு மாதம் பாசமாக இருப்பது போல நடித்து ஏமாற்றி. பிறகு கடத்தி தினமும் கொடுமை செய்ய துவங்கியிருக்கிறான் வியாசெஸ்லவ்.

குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கருதியிருக்கிறார் நடாஷா. ஆனால், குழந்தை பிறந்த பிறகும் அந்த கொடூரனிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

நடாஷா ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கும் போது தான் துருக்கி அழைத்து சென்று அங்கே யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்திருக்கிறான் வியாசெஸ்லவ். அதன் பிறகு ஏறத்தாழ ஒரு செக்ஸ் அடிமையாக தான் வாழ்ந்து வந்துள்ளார் நடாஷா.

வியாசெஸ்லவை சந்திக்க வரும் தொழில் ரீதியான பார்ட்னர்கள் முன்னிலையில் தன்னை அடித்து துன்புறுத்துவான் என்றும் கூறியுள்ளார் நடாஷா. அப்பார்ட்மெண்ட்டில் என்னை வைத்து பூட்டிவிட்டு சென்றுவிடுவான். நான் வீட்டை சுத்தம் செய்து, துணிகளை துவைத்து, உணவு சமைத்து வைக்க வேண்டும்.

தினமும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டேன் என்று கூறியுள்ளார் நடாஷா.

கர்ப்பமாக இருந்த வரை நடாஷாவை விட்டு வைத்த வியாசெஸ்லவ். குழந்தை பிறந்த மறுதினமே, பாலூட்டிக் கொண்டிருந்த போது, நடாஷா தன்னை மதிக்கவில்லை என்று காரணம் கூறி அடித்து துன்புறுத்த துவங்கியுள்ளான். தினமும் கற்பழிப்புக்கு ஆளானேன். முதல் குழந்தை ஈவா பிறந்து 22 மாதங்கள் கழித்து இரண்டாவது குழந்தை லிசா பிறந்தாள் என்று நடாஷா கூறியுள்ளார்.

முதல் மனைவி மூலம் பிறந்த மகன் தான் நடாஷாவை வியாசெஸ்லவ் துன்புறுத்தி வருவதை அறிந்து துருக்கி போலீஸில் புகார் அளித்துள்ளார். வியாசெஸ்லவிடம் இருந்து தப்பித்த பிறகு உக்ரைனில் இருக்கும் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் நடாஷா.

அங்கேயும் நடாஷாவை கண்டுபிடித்து வந்த வியாசெஸ்லவ், இவள் தனக்கு சொந்தமானவள். சாகும் வரை அவள் என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று சண்டையிட்டுள்ளான். அங்கிருந்து நடாஷாவை, குழந்தைகளை தன் காரில் இழுத்து போட்டுக் கொண்டு ரஷ்யா சென்றுள்ளான் வியாசெஸ்லவ்.

மாஸ்கோவில் கடந்த ஜூன் 2016 முதல் ஜனவரி 2018 வரை அடைத்து வைக்கப்பட்டிருந்த நடாஷா எப்படியோ கடைசியாக பிப்ரவரி மாதம் தப்பித்து வந்துவிட்டார். கடைசி மூன்று மாதங்களில் அதிக துன்புறுத்தல் காரணமாக அதிக இரத்தப்போக்குக்கு ஆளாகியுள்ளார் நடாஷா.

தான் இறந்துவிடுவேனோ என்ற அச்சத்தில் மருத்துவரிடம் அழைத்து செல்லுமாறு மன்றாடி கேட்டுள்ளார் நடாஷா. அப்போது குழந்தைகளை பினைக்கைதிகளாக வைத்து கொண்டு நடாஷாவை மருத்துவமனை சென்று வர கூறியுள்ளான்.

மருத்துவமனை சென்று நடாஷா அங்கே மருத்துவர்களிடம் நடந்ததை எல்லாம் கூறி உதவி நாடியுள்ளார். பிறகு, வியாசெஸ்லவிடம் நாடகமாடிய மருத்துவர்கள். இரத்த பரிசோதனைக்காக வேறு மருத்துவமனை அழைத்து செல்ல கூறியுள்ளனர். வியாசெஸ்லவ், நடாஷாவின் இரத்த மாதிரிகளை எடுத்துக் கொண்டு வேறு மருத்துவமனை சென்று வரும் நேரத்தில் குழந்தைகளை காப்பாற்றியுள்ளனர் மருத்துவர்கள்.

பிறகு, நடாஷா மற்றும் குழந்தைகளை அகதிகள் பாதுகாப்பு முகாமில் சேர்த்துள்ளனர். தப்பித்து வந்த பிறகும் இன்றும் நடாஷாவிடம் அந்த பயம் போகவில்லை.

செக்ஸ் அடிமையாக வைத்திருந்த குற்றத்திற்கான வழக்கு வியாசெஸ்லவ் மீது பதியப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் நடாஷா இன்று உயிருடன் இருப்பது அவர் செய்த பாக்கியம் என்று கூறியுள்ளார்.