இன்றைய ராசிபலன் (28-10-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

346

இன்றைய ராசிபலன்……..

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். எடுக்கின்ற முயற்சிகளில் எல்லாம் வெற்றி அடையும். திருமண யோகம் கைகூடி வரும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஊடல்கள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோக ரீதியான முன்னேற்றம், வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கின்ற விஷயங்களில் தோல்வியுற வாய்ப்புகள் உண்டு. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு தான் பலன் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சோம்பலுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெளியூர் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. வேலைவாய்ப்புகளை தேடுபவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்களில் எச்சரிக்கை தேவை. பணம் உடைமைகள் போன்றவற்றை இழப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் அனுசரணையாக செய்வதில் சிக்கல்கள் தொடரும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி பிறக்கும். உங்களிடம் வம்புக்கு வருபவர்களுக்கு சரிசமமாக போட்டி போடாதீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க உதவும். பண ரீதியான விஷயத்தில் மூன்றாம் நபர்களை நம்பாமல் சுயமுயற்சி நன்மை தரும். பெண்களுக்கு பழைய நினைவுகளை அசை போட கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். பழைய பொருட்கள் நீங்கி புதிய பொருட்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுத்த கடன் திரும்ப கைக்கு கிடைக்கும். விநாயகரை வழிபடுதல் நல்லது நடக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிவுடன் செயல்படும் நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களின் நேர்மையை உங்களுடைய முன்னேற்றத்திற்குக் பாலமாக அமைய இருக்கிறது. பெண்களுக்கு மனோபலம் கூடும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உளைச்சல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதக பாதகம் சூழ்நிலையை பொறுத்து அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நண்பர்களின் உதவியால் நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இட மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. சரியான புரிதல் இல்லாமல் நிறைய மன உளைச்சல்களை சந்திக்கலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்களைத் தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பமான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பண விஷயத்தில் சரளமான கொடுக்கல் வாங்கல் நிகழும். முதலீடுகள் மூலம் லாபம் காண்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மன சங்கடத்தை ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும். திடீரென பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்பட்டாலும் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோக ரீதியான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களை அலைச்சலை கொடுக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நடைபெறக்கூடிய நல்ல நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சிறு சிறு வாக்கு வாதங்கள் நிகழும். உங்களின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் மறுக்கப்படும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். சக பணியாளர்கள் மூலம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பெண்களுக்கு எதையும் எதிர்க்கும் துணிச்சல் பிறக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடைபெறும். நீண்டநாள் கடன்கள் வசூலாகும். நிலுவையில் இருக்கும் வீடு கட்டும் பணி தொடர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கும். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளில் வீண் விரயங்கள் ஏற்படலாம்.