அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தது தெரிந்தும் டிரம்ப் செய்த செயல்! கமெராவில் சிக்கிய காட்சி!!

601

டிரம்ப்……….

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததை அறிந்த பின்னர், டிரம்ப் மண்ப் பெண்ணுடன் சேர்ந்து புகைப்படத்தி போஸ் கொடுத்த வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது.

குடியரசு கட்சியின் வேட்பாளரான டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவித்துக் கொண்டிருக்கும் போது, டிரம்ப் Virginia-வின் Sterling-ல் உள்ள தனது தேசிய கோல்ப் கிளம் மைதானத்திற்கு சென்று ஓய்வெடுத்தார்.

அவர் அங்கு அடைந்த சிறிது நேரத்தில், ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை எல்லாம் அவர் வெளியில் காட்டிக் கொள்ளாமல், அந்த இடத்தில் திருமணம் செய்து மணப் பெண்ணின் விருப்பத்தை ஏற்று அவருடன் சேர்ந்து போஸ் கொடுத்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், திருமண விருந்தினர்களான மணப்பெண் மற்றும் மணமகனுடன் போஸ் கொடுப்பதைக் காட்டுகிறது.

அங்கிருந்த மக்கள், சிலர் நாங்கள் உன்னை நேசிக்கிறோம் என்று கூச்சலிடுவதை மக்கள் கேட்கலாம்.

டிரம்ப் வெளியேறத் தொடங்கியதும் மக்கள் ஆரவாரம் செய்து கைதட்ட ஆரம்பிக்கிறார்கள். டிரம்ப் தோல்விக்கு பின் வெளியில் வந்தாலும், அவர் பொதுவெளியில் தேர்தலைப் பற்றியோ அல்லது தோல்வியுற்றதைப் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை.

டிரம்ப் இன்னும் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை, தேர்தல் வெகு தொலைவில் உள்ளது, தேர்தல் விஷயத்தில், பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், பல மாநிலங்களில் வாக்குகள் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

டிரம்ப் தன்னுடைய அறிக்கை ஒன்றில், பல மாநிலங்களில் மோசடி செய்ததாக கூறியுள்ளார். ஆனால் அந்த கூற்றுக்களுக்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை அவர் சமர்ப்பிக்கவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.