இன்றைய ராசிபலன் (21-11-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

111

இன்றைய ராசிபலன்…………..

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். இதுவரை உங்கள் பேச்சுக்கு செவி சாய்க்காதவர்கள் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்க துவங்குவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு இடமாற்றம் போன்றவை சாதக பலன்களை கொடுக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய உற்சாகம் பிறக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. சோர்வாக இருந்த நீங்கள் திடீரென உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்க பெறும். கொடுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியான விஷயங்களில் நீங்கள் எடுக்கும் புதிய முடிவுகள் சாதகமாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய தைரியம் பெருகும். இதுவரை மன உளைச்சலை கொடுத்துக் கொண்டிருந்த கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறு சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு பொறுமை அதிகம் தேவைப்படும் நாளாக அமையும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பல புதிய நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். பெண்களுக்கு நினைத்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. தொழில் ரீதியான விஷயங்களில் வாடிக்கையாளர்கள் இடத்தில் உங்களுடைய மரியாதை உயரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதுரியமாக செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள சமயோஜித புத்தியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியான விஷயத்தில் லாபம் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலமும் பலவீனமும் அறிந்துகொள்ளக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் உத்தமம். பெண்கள் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு ஊழியர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது மூலம் முன்னேற்றம் காணலாம். சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். மனதிற்கு பிடித்தவர்களை மணமுடியும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்க கூடிய நல்ல நாளாக அமையும். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வதன் மூலம் ஏற்றம் உண்டாகும். அரோகிய ரீதியான விஷயத்தில் சற்று எச்சரிக்கை அவசியம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் விடா முயற்சிக்கு சிறப்பான வெற்றி கிடைக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியமும் கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைய இருக்கிறது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய முன் கோபத்தினால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் என்பதால் சற்று பொறுமையுடன் கையாள்வது மிக மிக முக்கியம். கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் உண்டு. பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு முடிவையும் ஆலோசிக்காமல் எடுப்பது நல்லதல்ல. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார ரீதியான இறக்கத்தை சமாளிக்க வேறு வழியைத் தேடுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கப்பெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூக அக்கறை மேலோங்கி காணப்படும். இயல்பாகவே இரக்க குணம் படைத்த நீங்கள் இன்றைய நாளில் நல்ல செய்திகளை பெற இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களால் பாராட்டப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். ஆரோக்கிய ரீதியான செலவுகளை சமாளிக்க கஷ்டப்படுவீர்கள்.