எலுமிச்சையுடன் உப்பு சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? இனியாவது தெரிஞ்சுக்கோங்க!

829

எலுமிச்சை……….

நமது இயற்கை வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. நிறைய செலவு செய்து, பல நாட்கள் சிகிச்சை கொடுத்தும் குணமடையாத பல நோய்களை நமது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே இயற்கை வைத்தியத்தில் எளிதாக குணப்படுத்தலாம்.

இயற்கையாகவே மருத்துவ குணங்கள் உள்ள பொருட்கள் எலுமிச்சையும், மிளகும். இந்த இரண்டுடன் உப்பையும் சேர்க்கும்போது அது உங்களின் ஆரோக்கியத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தும்.

இவை தனித்தனியே சில மருத்துவ குணங்களை கொண்டிருந்தாலும் ஒன்றாக இணையும்போது கிடைக்கும் பலன்களே தனிதான். எலுமிச்சை, மிளகு மற்றும் உப்பு இந்த மூன்றையும் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

எடை குறைப்பு

இது அனைவரும் அறிந்த ஒரு வைத்தியம்தான். எலுமிச்சை சாறில் மிளகு தூள் மற்றும் தேன் சேர்த்து அதில் சூடான நீரை கலந்து தினமும் காலை சாப்பிடுவதற்கு முன் குடித்தால் விரைவில் உங்கள் எடை குறைவதை பார்க்கலாம்.

குமட்டல்

வயிற்றில் ஏற்படும் சிக்கல்களை குணப்படுத்த ஓர் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் மிளகு போதும். இது இரண்டையும் ஒரு டம்ளர் சுடுநீரில் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து குடித்தால் எப்படிப்பட்ட வயிற்று உபாதைகளும் உடனே சரியாகிவிடும்.

ஆஸ்துமா

உங்கள் வீட்டில் யாருக்கேனும் ஆஸ்துமா இருந்தால் இந்த கலவையை எந்நேரமும் வீட்டில் வைத்திருப்பது நல்ல முடிவாகும். கொதிக்கும் நீரில் இரண்டு கிராம்பு, 10 மிளகு மற்றும் சில துளசி தழைகளை போட்டு 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இதனை வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும். இது இரண்டு வாரம் வரை உங்கள் பிரிட்ஜில் கெட்டு போகாமல் இருக்கும். ஆஸ்துமாவிற்கு இதைவிட சிறந்த இயற்கை மருந்து எதுவுமில்லை.

பல் வலி

அரை ஸ்பூன் கிராம்பு எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் மிளகு தூள் இரண்டையும் சேர்த்து வலி இருக்கும் பல்லின் மீது பூசவும். இந்த கலவையில் உள்ள கிராம்பு எண்ணெய் பல் வலியை குறைப்பதுடன் ஈறுகளில் உள்ள வீக்கத்தை குணப்படுத்தும்.

மூக்கில் இரத்தம் வடிதல்

சிறிய பஞ்சை எலுமிச்சை சாறில் மூழ்கி எடுத்து பயன்படுத்துவது மூக்கில் இரத்தம் வடிவதை குறைக்கும். இந்த பஞ்சை மூக்கில் இரத்தம் வரும் இடத்தில் வைத்து இரத்தகசிவு நிற்கும் வரை தலையை சாய்த்து வைத்திருந்தால் போதுமானது.

மூக்கடைப்பு

மூக்கடைப்பை சரிசெய்ய தும்மல் வரவேண்டியது அவசியம். இயற்கையான முறையில் தும்மல் வர இலவங்கப்பட்டை, மிளகு, ஏலக்காய் மற்றும் சீரகம் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக்கொள்ளவும். இதனை நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். மூக்கடைப்பு ஏற்படும்போது இதன் வாசனையை சுவாசித்தால் மூக்கடைப்பு சரியாகும்.