இன்றைய ராசிபலன் (28-11-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

51

இன்றைய ராசிபலன்…………..

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் மந்த நிலை காணப்பட்டாலும் எதிர்பார்த்தபடி ஓரளவுக்கு லாபம் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைக்க கூடிய விஷயங்கள் வேறு மாதிரியாக நடக்க வாய்ப்புகள் உண்டு. திட்டமிட்டு செய்யும் காரியங்கள் இடையூறுகள் ஏற்பட்டாலும் வெற்றியில் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம். சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் தரும் வகையில் அமையும்.

மிதுனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான அமைப்பு என்பதால் இதுவரை இருந்து வந்த மிகப்பெரிய பிரச்சனைக் கூட சாதாரணமாக மாறலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறைய கூடிய வாய்ப்புகள் உண்டு. சுயதொழில் புரியும் நபர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்ப்புகள் இருந்தாலும் அவைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் கொடுக்கும் தொந்தரவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய ஆற்றல் பிறக்கும். தகுந்த சமயத்தில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டாகும். அரசு வழி காரியங்கள் அனுகூலமான பலன்களைக் கொடுக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு சிறப்பான லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி உண்டு. பெண்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாக வாய்ப்புகள் உண்டு.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை விட சிறப்பான பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். திருமண சுபகாரியங்கள் இனிதே கைகூடிவரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். சுயதொழில் புரியும் நபர்களுக்கு கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும் யோகமுண்டு. இறை வழிபாடுகள் மன அமைதிக்கு வழிவகுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு டென்ஷன் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி மகிழ்வு பிறக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். சொத்துக்கள் வாங்கும் மற்றும் விற்கும் முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதக பலன் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நீண்ட நாள் விடாமுயற்சியுடன் செய்துகொண்டிருந்த ஒரு விஷயத்திற்கு நல்ல பலன் கிடைக்க இருக்கிறது. வேலை இல்லாமல் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் மந்த நிலை காணப்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள் மூலம் நல்ல நிகழ்வுகள் நடைபெறும். எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் கொடுக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கிறது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மூலம் மன அமைதி பெறலாம். நீங்கள் அதிகம் நம்பும் ஒருவரே உங்களுக்கு எதிராகத் திரும்பவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான செலவுகளை சமாளிக்க போராடுவீர்கள். முருகப்பெருமானை வழிபட்டால் நல்லது நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் நன்மைகள் நடைபெறக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகள் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லது நடக்கும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் சிறப்பான முன்னேற்றம் உண்டு.