இன்றைய ராசிபலன் (29-11-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

114

இன்றைய ராசிபலன்…………

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் எடுத்த காரியத்தில் எல்லாம் ஜெயம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டங்கள் எதிர்பாராத சமயத்தில் உங்களுக்கு கிடைக்கப்பெறும். பணியில் இருப்பவர்களுக்கு ஓய்வு கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்கள் மன நிம்மதியுடன் காணப்படுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் அப்படியே நடக்க இருப்பதால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். முகத்தில் புதிய பொலிவு உண்டாகக் கூடும். பெண்களுக்கு இனம் புரியாத ஒரு உற்சாகம் இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பணி சுமை குறையும் வாய்ப்புகள் உண்டு. தொழில் புரிபவர்களுக்கு லாபம் உண்டு.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய மதிப்பும், கௌரவமும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நலம் தரும். யார் பெரியவர் என்ற போட்டியில் ஈடுபட்டால் மிஞ்சுவது என்னமோ கவலை மட்டுமே என்பதை உணர்வீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உள்ளம் மகிழும் விஷயங்களெல்லாம் நடைபெற வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் பல தடைகளை சந்தித்தாலும் வெற்றியில் முடியும். பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு விரட்டி உண்டாக்கும் வகையில் அமையலாம். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது வெற்றி தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்டநாள் போராட்டங்கள் எல்லாம் முடிவுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இழுபறியில் இருந்த வந்த கடன்களும் படிப்படியாக குறைந்து விடும். கணவன் மனைவிக்கு இடையே போதிய புரிதல் உண்டாக வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை மதித்து நடப்பதன் மூலம் மன அமைதி பெறலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான பலன்கள் கிடைக்க இருப்பதால் நல்லவைகள் நடக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். பிள்ளைவரம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சுபச் செய்தி உண்டு. பணிகளில் இருப்பவர்கள் தேவையற்ற அலைச்சல்களை தவிர்ப்பது உத்தமம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிர்பாராத பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. பணியில் இருப்பவர்கள் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது உத்தமம். மூன்றாம் நபர்களின் பிரச்சனைகளில் தலையிட்டால் அதுவே தலை வலியாக வந்து பெற வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று என்னால் வீண் விரயங்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. எனவே தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நன்மைகளை பெறலாம். பிள்ளைகள் குறித்த எதிர்கால நலன் சார்ந்த விவாதங்கள் மேலோங்கி காணப்படும். இதனால் குடும்பத்தில் சண்டைகளும் சச்சரவுகளும் தலைதூக்கத் துவங்கும். விட்டுக் கொடுத்து அனுசரித்து சென்றால் நல்லது நடக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் சார்ந்த விஷயங்களில் அமோக வெற்றி கிடைக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுயதொழில் புரிபவர்கள் அற்புதமான நாளாக அமையும். பணியில் இருப்பவர்கள் மன நிம்மதி கிடைக்க வழி தேடுவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் புதிய விஷயங்களை செயல்படுத்துவது வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். பணியில் இருப்பவர்கள் அமைதியான சூழலில் பணிபுரிய வாய்ப்புகள் உண்டு. தொழில் புரிபவர்கள் மந்த நிலை இருந்தாலும் பெரிதாக கவலை கொள்ளத் தேவையில்லை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்தது ஒன்று நடந்தது ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உண்டு. நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் நன்மைகளைப் பெறலாம். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்த்த வகையில் சலுகைகள் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். ஆரோக்கிய ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எளிதாக சமாளிப்பீர்கள்.