ஆர்யா வேண்டாம், எனக்கு சூர்யா மாதிரி கணவர் வேண்டும்: எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்!!

1033

ஆர்யாவிற்கு பெண் தேட தொடங்கப்பட்ட நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி பெரிய சர்சையை ஏற்படுத்தியது இந்த நிகழ்ச்சி. இறுதியில் ஆர்யா எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளாமல் ரசிகர்களை ஏமாற்றினார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ஷ்ரியா சுரேந்திரன் ஒரு பேட்டியில் “எனக்கு சூர்யா மாதிரி மாப்பிள்ளை தான் வேண்டும்” என கூறியுள்ளார்.

“ஜோதிகாவை அவர் பார்த்துக்கொள்ளும் விதம் பார்த்து எனக்கும் அவரை போலவே ஒரு கணவர் கிடைத்தால் நல்ல இருக்கும் என்று தோன்றுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.