நயன்தாராவின் அடுத்த பட படப்பிடிப்பு எப்போது?

84

நயன்தாரா…

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் அவர் தற்போது ’நிழல்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நயன்தாரா நடித்துவரும் ’அண்ணாத்த’ படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது விஜய்சேதுபதியுடன் நயன்தாரா நடிக்க உள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கவுள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் டிசம்பர் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ச்சியாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை லலித்குமார் தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படம் அடுத்த வருடம் இறுதியில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.