மிகவும் விரைவாக உடல் எடையை குறைக்க இரவு இவற்றை மட்டும் செய்யுங்கள்!!

1010

உங்கள் அளவை அளந்து பார்க்கும்போதும், எடையை பார்த்தாலும் மேலும் குண்டாகிவிட்டீர்கள் என்ற மன அழுத்தம் தான் வரும்.திடீரென உடல் எடை அதிகரிப்பதற்கு உங்கள் இரவு வேலை வழக்கங்கள் கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சிகள் கூறுகிறது.

உங்கள் எடை கூடுவதற்கான காரணம் என்னவென்பதை கண்டறிந்து அதற்கு முன்னெச்சரிக்கைகள் நவவெடிக்கை எடுத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

உடல் எடையை அதிகரிக்கும் முக்கிய காரணங்கள் உங்கள் இரவு நேர வழக்கங்களில் மாற்றம் இருப்பதால் கூட இருக்கலாம்.அவை என்னவென்பதை அறிந்து செயல்பட்டால் உங்கள் எடை அதிகரிப்பதை குறைக்கலாம்.

இரவு 6 மணிக்கு பிறகு சாப்பிடக்கூடாது என்ற விதி நமக்குத் தெரியும், ஆனால் இரவு உணவு அல்லது நள்ளிரவு தின்பண்டங்களில் இருந்து நம் நாக்கை கட்டுபடுத்த முடியாது.

தாமதமான உணவு எடை அதிகரிக்க வழிவகுக்கிறது என ஆய்வுகள் கூறுகிறது. மேலும் இது கொழுப்பு, இன்சுலின் அளவுகளை அதிகரிக்கலாம் மற்றும் நம் ஹார்மோன்களையும் எதிர்மறையாக பாதிக்கலாம்.

மாலையில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் காப்பி உங்கள் தூக்கத்தை பாதிக்கும். நீங்கள் உறங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு காப்பி அருந்தலாம்.

மேலும் காப்பியில் குரோரோஜெனிக் என்ற அமிலம் இருப்பதால் அது உங்கள் எடையை அதிகரிக்கும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். காப்பிக்கு பதிலாக மூலிகை டீ அல்லது சூடான நீர் குடிக்கலாம்.

இரவு 7-8 நேரம் தூங்குவது தான் ஆரோக்கியமான தூக்கம். இந்த நேரம் நம் தினசரி அடிப்படையில் குறைவாக இருந்தால் பல உடல்நலப் பிரச்சினைகள் தொடங்கும்.

தூக்கமின்மை மற்றும் வளர்சிதை மாற்றத்தில் எதிர்மறை மாற்றங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு இருக்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. தூக்கம் இல்லாமையால் சோர்வு ஏற்படுகிறது.

உடற்பயிற்சிகள் எடை இழப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன, ஏனெனில் அவை உங்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் கலோரி எரிக்க அதிகம் உதவுகின்றது.

ஒவ்வொரு நாளும் சுமார் 15 நிமிடங்களுக்கு நீங்கள் நடந்து இருந்தால் அவை 100 கலோரிகளை எரிக்க உதவுகிறது. வேண்டும். இது ஒரு வாரத்திற்கு சுமார் 700 கலோரிகளையும் ஒரு வருடத்திற்கு 10 பவுண்ட் வரை எடை இழப்புக்கு உதவுகிறது.

தூக்கமின்மைக்கு காரணம் தூங்குவதற்கு முன் நீங்கள் உபயோகிக்கும் நீல நிற வெளிச்சத்தை வெளிப்படுத்தும் மின்னணு சாதனங்களாக கூட இருக்கலாம்.

மெலடோனின் என்ற ஹார்மோன் தான் உடலில் தூக்கச் சுழற்சிகளை ஒழுங்குபடுத்தும். மொபைல் போன்களை பயன்படுத்தும்போது இந்த ஹார்மோன் பாதிக்கப்படுகிறது. படுக்கைக்குப் செல்லும் முன் சமூக வளைதளங்கலில் நேரம் செலவிடுவதை விட, புத்தகத்தையோ அல்லது பாடலோ கேட்கலாம்.

காலையில் நேர வெயில் உடலில் படுவது மிகவும் நல்லது. 20-30 நிமிடங்கள் இயற்கை வெளிப்புற ஒளி உங்கள் உடலில் படம்படி பார்த்துக்கொள்ளுங்கள்.