புதிய அவதாரம் எடுக்கும் வாட்ஸ்ஆப்- புரியாமல் மாட்டிக் கொள்ளும் பயனாளர்கள்!

111

வாட்ஸ்ஆப்………

பேஸ்புக்கின் மெசேஜிங் செயலியான வாட்ஸ்ஆப், நெட்டிசன்களின் தவிர்க்க முடியாத தகவல் தளமாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஒட்டுக் கேட்கப்படும் என்ற அச்சம் இல்லாமல் ஹாயாக அதில் தகவலையும் மீடியாவையும் பறிமாறி வந்த மக்களின் மீது, வாட்ஸ் ஆப், புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

வாட்ஸ்ஆப்பின் புதிய நிபந்தனைகளும், ரகசிய காப்பு விதிகளும் வரும் 8 ஆம் தேதி முதல் மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத என்ன மாற்றங்கள் என பார்க்கலாம்..

* பயனாளர்களின் தகவல்கள், செல்போன் நம்பர், முகவரி, ஸ்டேட்டஸ், பண பரிவர்த்தனை என அனைத்தும் வாட்ஸ்ஆப்பால் சேகரித்து வைக்கப்படும்.

* வாட்ஸ்ஆப் பேமென்ட்ஸ் என புதிதாக ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தி அதில் இந்த விவரங்களை சேமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

*நாம் என்ன விதமான போனை பயன்படுத்துகிறோம், எங்கெல்லாம் செல்கிறோம் என்பதை வாட்ஸ் ஆப் கண்காணிக்கும்.

* நமது வங்கிக்கணக்கிலும் மூக்கை நுழைக்க வாட்ஸ்ஆப் முடிவு செய்துள்ளது.

*நீங்கள் யாருக்கு, எதற்காக, எங்கு டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக பண பரிவர்த்தனை நடத்துகிறீர்கள் என்பதையும் வாட்ஸ் ஆப் கண்டுபிடிக்கும்.

* பண்டிகை காலம் போன்ற தருணங்களில் நீங்கள் எந்த வகையில் பணத்தை செலவழிக்கிறீர்கள் என்பதை அறியவும் வாட்ஸ்ஆப் விரும்புகிறது.

*வாட்ஸ்ஆப்பில் நாம் அனுப்பும் தகவல்கள் 30 நாட்களுக்கு அதன் சர்வர்களில் சேமித்து வைக்கப்படும்

* பயனாளர்கள் குறித்த விவரங்களை திரட்டி பேஸ்புக் வாயிலாக பிற தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவதும் இதன் பின்னணியில் உள்ளது.

* வாட்ஸ்ஆப்பின் ஒப்வொரு பயனாளரின் விவரங்களையும், நடமாட்டத்தையும் பின்தொடர்ந்து அதன் வாயிலாக பணத்தை சம்பாதிப்பது தான் பேஸ்புக்கின் திட்டம்

* இந்தியாவில் மட்டும் 20 கோடி பேர் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகின்றனர்

* இந்த 20 கோடி பேரின விவரங்களையும் வர்த்தக நிறுவனங்களுக்கு கொடுத்தால் கோடிக்கணக்கில் பணம் கொட்டும்

*இந்த நிறுவனங்கள் அதற்கு ஏற்றவாறு விளம்பரங்களை வடிவமைத்து மக்களை கவரும்

*இதே பாணியை தான் ஏற்கனவே பேஸ்புக்கும் பின்பற்றி வருகிறது

*நிபந்தனைகள் மாற்றம் குறித்த அறிவிப்பு வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து வருகிறது

* புதிய நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் தொடர்ந்து வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம்

*நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள விருப்பம் இல்லை என்றால் அந்த வாட்ஸ்ஆப் கணக்கு நீக்கப்பட்டு விடும்.

*புதிய நிபந்தனைகளை ஒப்புக்கொள்ளாதவர்கள் பிப்ரவரி 8 க்கு மேல் வாட்ஸ்ஆப் வாயிலாக தகவல்களை அனுப்ப இயலாது

*சாதாரண பயனாளர்கள், என்ன ஏது என்று புரிந்து கொள்ளமலேயே, ஒப்புதல் அளிக்கும் பட்டனை தட்டி விடுவதாக கூறப்படுகிறது.