தொடர்ச்சியாக குட்டிக்கரணம் அடித்து சாதனை படைத்த சிறுவன்!

91

குட்டிக்கரணம்……..

9 வயது சிறுவன் ஒரு கிலோ மீட்டர் தூரம் தொடச்சியாக குட்டிக்கரணம் அடித்து ஆஸ்கர் உலக சாதனை படைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கிழவன் கோயில் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன், சித்ரா தம்பதியினரின் மகன் 9 வயதான சந்தோஷ் . இவர் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். சந்தோஷ் சிறுவயது முதலே சுறுசுறுப்பாக இருந்து வந்துள்ளார். அதனை பயன்படுத்தி அவரது திறமைகளை வளர்க்க பெற்றோர் பல்வேறு பயிற்சிகளை அளித்து வந்துள்ளனர். அதிலும் குட்டிக்கரணம் அடிப்பதில் சிறுவன் கெட்டிக்காரர்.

இதனை சாதனையாக நிகழ்த்த வேண்டும் என அந்த சிறுவனின் குடும்பத்தினர் நினைத்துள்ளனர். இந்நிலையில் சிறுவன் சந்தோஷ், தொடர்ந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து குட்டிக்கரணம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆஸ்கர் உலக சாதனை கமிட்டியினர் இவரது சாதனையை பாராட்டி சந்தோஷிற்கு ஆஸ்கர் வேர்ல்டு ரெக்கார்டு எனும் சாதனையாளர் பட்டத்தை வழங்கி சான்றிதல் மற்றும் பதக்கம் வழங்கினர். இந்த சிறுவனின் திறமையை கிராம மக்கள் கைதட்டி உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்.