ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற சாதனைபடைத்துள்ளார் தோனி!!

128

தோனி…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஐபில் சீசன் தொடங்கிய 2008-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டு வரை தோனி சம்பளமாக 137 கோடி ரூபாய் வாங்கியுள்ளார்.

இதேபோல் நடப்பு ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ள தோனிக்கு, 15 கோடி ரூபாய் சம்பளம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்தம் 152 கோடி ரூபாய் சம்பளம் ஈட்டியுள்ள தோனி, ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.