இதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே : ரகுவரனின் மனைவி ரோகினி கண்ணீர்!!

622

நடிகர் ரகுவரன் இன்று உயிரோடு இல்லை. அவருக்கு மொழி கடந்தும் மிகத் தீவிரமான ரசிகர்கள் இருப்பதை அவ்வப்போது சில பிரபலங்கள் சிலாகித்துப் பேசும் போது அறிய முடிகிறது.

எனினும், அவர் உயிரோடிருக்கையில் அவரது திரைப்படங்களில் அவரது ஒவ்வொரு அசைவுமே ரசிகர்களால் பெரும் ஆராவாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டமை குறித்து அவருக்கு பெரிதாக எதுவும் தெரியாது என அவரின் மனைவியும் நடிகையுமான ரோகினி கூறியுள்ளார்.

ஒருவேளை ரசிகர்கள் தன்னை இத்தனை ஆராதிக்கிறார்கள் என்று அறிந்திருந்தால் அவர் மிகவும் மகிழ்ந்திருப்பார். ஆனால், அவருக்கு அப்போது அதெல்லாம் தெரியாது.

நானும், அவரது நண்பர்களும் அவரிடம் அவரது நடிப்புத்திறனைப் பற்றி சிலாகித்துப் பேசுவோம் தான், ஆனால் அவருக்கு அது போதவில்லை. அவரது மரணத்திற்குப் பிறகு ரசிகர்கள் திரையில் ரகுவரனைக் கண்டதுமே ஆர்ப்பரித்துக் கொண்டாடுவதைக் காணும் போது, இதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே என்று சில நேரங்களில் மனம் கனத்துப் போகிறது என ரோகினி தெரிவித்துள்ளார்.