அமெரிக்காவில் இருந்து இலங்கையில் உள்ளவருக்கு மாற்றப்பட்ட மில்லியன் கணக்கான பணம்! அ திர வைக்கும் தகவல்..!

305

ஹேக்……….

மோசடியான முறையில், இலங்கையில் உள்ள வங்கி கணக்கிற்கு கோடிக்கணக்கான பணம் மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ். சாவகச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க வங்கி கணக்குகளை ஹேக் செய்து சுமார் 13.4 மில்லியன் ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது. 41 வயதான சந்தேக நபர் ஒருவரே குற்றப் புலனாய்வுத் துறையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மோசடி கும்பல் ஒன்றின் உதவியுடன் இந்தப் பணத் தொகையைப் பெற்றுள்ளார். குறித்த மோசடி கும்பல் அமெரிக்க வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து சாவகச்சேரியில் உள்ள சந்தேகநபருக்கு பணத்தை மாற்றியுள்ளனர்.

இந்த மோசடியில் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கு பணம் வழங்கப்படுவதாகவும், கடந்த ஏப்ரல் முதல் மோசடிகளில் 140 மில்லியன் உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பண மோசடி தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் 30 சந்தேக நபர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேபோன்ற சம்பவம் தொடர்பாக புகார் வந்ததை அடுத்து, 29 வயதான சந்தேகநபர் வவுனியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.