இன்றைய நாளுக்கான ராசிபலன் (08-04-2021) உங்களுக்கு எப்படி ?

418

இன்றைய ராசிபலன்…..

மேஷம்

மேஷம்: சமயோசித புத்தியால் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும்.  புதிய முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்- மனைவிக்குள் மணப்போர் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். நெடுநாட்களாக தள்ளிப்போன விஷயங்கள் இனிதே முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில்நசக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் நீங்கும் நாள்.

கடகம்

கடகம்:  சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். திட்ட மிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழி உறவினர்கள் முக்கியத்தும் தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தினருக்கும் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.அதிகார பதவியில் இருப்பவர்களின்  நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள்.  வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை புரிந்து கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை  உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு

தனுசு:  உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.  உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர் வருகையால் வீடு, களைக்கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியமான முடிவுகளை எடுக்கும் நாள்.

மகரம்

மகரம்: இதுவரை இருந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கி இனிமேல் இனிதாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில்  வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.