இன்றைய நாளுக்கான ராசிபலன் (14-04-2021) உங்களுக்கு எப்படி ?

375

இன்றைய ராசிபலன்…………..

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்து கொள்ளுங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுகொடுத்து போங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். மதிப்புக் கூடும் நாள்.

கடகம்

கடகம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சாதிக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன விஷயங்கள் முடியும் உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் வரும். நன்மை நடக்கும் நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினை வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். எச்சரிக்க வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றி பெறும் நாள்.

தனுசு

தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள், வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் ஏற்படும் நாள்.

மகரம்

மகரம்: எதிர்பார்த்த விஷயங்கள் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி உதவுவார். தாயாரால் டென்ஷன் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் முக்கிய வேலைகள் விரைந்து முடியும். நன்மை கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றி பெறும் நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும் அன்பு அதிகரிக்கும். தோற்றப் பொலிவு கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரச்சினைக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.