மூன்று நாட்களில் தொப்பை மிக வேகமாக குறையும்! தினமும் 3 முறை இந்த பானத்தை அருந்துங்கள்!!!

1165

ஏராளமானோர் உடல் பருமன் பிரச்சினையால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சிலர் இந்த உடல் பருமன் பிரச்சினையை சமாளிப்பதற்கு தினமும் உடற்பயிற்சி மற்றும் வேறு சில செயல்களை பின்பற்றி வருகிறார்கள்.

ஒருவரது உடல் பருமன் அதிகரிப்பதற்கு அல்லது குறைவாக இருப்பதற்கு மரபணுக்கள் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தான் காரணம்.அதோடு உடல் எடை அதிகரிப்பதற்கு உடலுழைப்பு இல்லாமை, மோசமான டயட் அல்லது உணவுப் பழக்கங்கள், தூக்கமின்மை, அளவுக்கு அதிகமான மன அழுத்தம் மற்றும் குறிப்பிட்ட மருந்துகள் போன்றவைகளும் காரணங்களாகும்.

ஒருவரது உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளான உயர் கொலஸ்ட்ரால், டைப்-2 சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், குறட்டை, கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஆஸ்டியோஆர்த்ரிடிஸ் போன்றவற்றால் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
அது மட்டும் இல்லை, குறிப்பாக பெண்களுக்கு தொப்பை அதிகமாக உள்ளதாலும், உடல் எடை பிரச்சினையாலும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தொப்பையை 3 நாட்களில் குறைக்க இந்த ஒரு பானம் போதும் தினமும் அருந்துங்கள்.

இஞ்சி டீ:இஞ்சி உடல் எடை குறைவதை ஊக்குவிக்கும். அதுவும் இது உடலின் வெப்பநிலையை அதிகரித்து, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, தேவையற்ற கொழுப்புக்களை கரைப்பதோடு, பசியுணர்வைக் குறைக்கும்.

இதனால் கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைவதோடு, கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் தடுக்கப்படும்.மேலும் இஞ்சி செரிமானத்தை மேம்படுத்தும். 2-3 கப் இஞ்சியை டீயை தினமும் 2-3 முறை குடியுங்கள்.

உணவுகளுக்கு இடையே சிறு இஞ்சி துண்டை வாயில் போட்டு மெல்லுங்கள் அல்லது துருவிய இஞ்சியை உணவுகளில் தூவி சாப்பிடுங்கள்.
வேண்டுமானால் இஞ்சி கேப்ஸ்யூலை சாப்பிடுங்கள். ஆனால் இந்த கேப்ஸ்யூலை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தான் எடுக்க வேண்டும்.தொடர்ந்து செய்து வந்தால் 3 நாட்களில் மாற்றத்தை உணர முடியும்.