பல பேருடன் பெண் தகாத உறவு : தலையில் கல்லை போட்டு கொடூரமாய் கொலை செய்த நபர்!!

144

திருச்சியில் பல பேருடன் தகாத முறையில் பழகிய பெண்ணை ஒருவர் கொடூர முறையில் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே மணப்பாறைக்கு அடுத்த துவரங்குறிச்சியில் உள்ள தச்சமலை வன பகுதியில் கடந்த 29-ஆம் திகதி 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் இறந்து கிடந்திருக்கிறார்.

அந்த வழியாக சென்றவர்களால் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்ட பின் காவல்துறையினர் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றினர்.

ஆடைகள் கலைந்த நிலையில் முகத்தில் கல்லை போட்டு முகம் சிதைக்கப்பட்டு அந்த பெண் இறந்திருந்தார். அதனால் இறந்தவர் பற்றியும் கொன்றவர் பற்றியும் துப்பு கிடைக்காமல் காவல்துறை திண்டாடியது.

இந்நிலையில் சடலம் திண்டுக்கல் நந்தவனப்பட்டியை சேர்ந்த ராமர் என்பவரது மனைவி மலர்க்கொடி தான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த பெண்ணிற்கு ஒன்றரை வயதில் குழந்தை இருந்த நிலையில் கணவரை விட்டு பிரிந்திருக்கிறார் . பின் சில வருடங்கள் கழித்து மலைப்பட்டி அருகே வழக்கறிஞர் தம்பி ஒருவரை மணந்திருக்கிறார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் மாரடைப்பால் இரண்டாவது கணவரும் காலமாகி இருக்கிறார். அதன் பின் குழந்தைகளை ஆசிரமத்தில் விட்டு விட்டு முதல் மகனுடன் துபாய் சென்று அங்கு வேலை செய்தார்.

மீண்டும் தமிழ்நாடு வந்த மலர்க்கொடி திண்டுக்கல் வந்திருக்கிறார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகையில் உடன் பணிபுரிந்த தோழியின் கணவரின் நண்பருடன் தகாத உறவுடன் பழகியிருக்கிறார்.

இதனையடுத்து காரியப்பட்டியில் தனது வீட்டில் முருகன் மலர்கொடியை தங்க வைத்து ஒன்றாக வாழ்ந்திருக்கின்றனர்.

இந்நிலையில் மலர்க்கொடி வேறு சில ஆண்களோடும் தகாத உறவில் ஈடுபட முருகனுக்கு இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

ஆகவே தச்சன்குடி வனப்பகுதிக்கு மலர்கொடியை கூட்டி சென்று அங்கு உறவில் ஈடுபட்டிருக்கிறார். அதன் பின் மலர்க்கொடி பணம் விடயமாக ஏதோ கூற ஏற்கனவே கோபத்தில் இருந்த முருகன் அருகில் இருந்த கல்லை எடுத்து மலர்கொடியில் தலையில் போட்டு கொன்றிருக்கிறார்.

முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மலர்கொடியின் புகைப்படத்தை உள்ளூர் ஊடகங்கள் மூலம் காவல்துறையினர் ஒளிபரப்பியதால் மலர்கொடியுடன் பனி புரிந்த பெண்கள் இருவர் காவல்நிலையம் சென்று மலர்க்கொடி பற்றிய விடயங்களை கூறினார்.

அதன் பின்னர் முருகன் தான் கொலையாளி என்று அவனை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையின் போது நடந்த விடயங்களை கூறிய முருகன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டான்.