மாதவிடாய் நின்ற பின்பும் 63 வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண் : எத்தனாவது குழந்தை தெரியுமா?

155

தமிழகத்தில் முதன்முறையாக 63 வயது பெண் ஒருவர் குழந்தை பெற்றிருப்பது மருத்துவத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி கிருஷ்ணா(71)-செந்தமிழ் செல்வி(63).

இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், இவர்கள்சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடி 2 ஆண்டுகளாக பெற்று வந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. சுமார் 3 கிலோ எடையுடன் பிறந்த இந்தக் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மாதவிடாய் நின்ற 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதுவும் 63 வயதில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்திருப்பது தமிழகத்தில் இது முதல்முறை என்று கூறப்படுகிறது.