நடிகர் பார்த்திபனின் இன்னொரு மகள் அபிநயாவை பார்த்திருக்கிறீர்களா? : புகைப்படம் உள்ளே!!

238

1985ஆம் ஆண்டு ஆண்பாவம் படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை சீதா. அதன்பின்பு புதிய பாதை படத்தில் நடிக்கையில் நடிகர் பார்த்திபனுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இரண்டு குழந்தைக்கு தாயாகிய சீதா திடீரென பார்த்திபனுடன் கருத்து வேறுபாடு காரணமாக 2001ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

அதன் பின்பு 8 வருடங்கள் தனிமையை அனுபவித்த நடிகை சீதா 2010ம் ஆண்டு நடிகர் சதீஷை காதலித்து லிவிங் டூ கெதர் வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார். இவருடன் 6 வருடங்கள் வாழ்ந்த சீதா, சதீஷின் ஆணாதிக்கம் அதிகம் என்பதால் அவரையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார். மற்றொரு புறம் அவர் சீதாவிடம் பண மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்‌ஷய்க்கும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திருமணம் இனிதே நடைபெற்றது. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

சினிமாவில் வித்தியாசமான முயற்சி என்பது மிகவும் முக்கியம். அப்படி ரசிகர்களால் இவர் படு வித்தியாசமானவர் என்று பேசப்படுபவர் நடிகர் பார்த்திபன்.வித்தியாசமான திரைக்கதை மூலம் தனக்கென பல ரசிகர்களை கொண்டவர்.

சினிமாவை தாண்டி அவரது குடும்ப வாழ்க்கை பற்றி நமக்கு தெரிந்த விஷயம் தான். சமீபத்தில் கூட அவரது மகள் கீர்த்தனாவுக்கு படு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.

தற்போது பார்த்திபன்-சீதாவின் இன்னொரு மகள் அபிநயாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளது.கல்லூரி படிப்பை முடித்த அபிநயா சினிமாவிற்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.