காதலனை நம்பிச் சென்ற சிறுமிக்கு நிகழ்ந்த துயரம் : காதலன் செய்த கேவலமான காரியம்!!

97

இந்தியாவில் கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பாறசாலை அருகே காதலிப்பதாக கூறி 15 வயது சிறுமியை கடத்தி சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் பாறசாலை அருகே செங்கல் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (21). கொற்றாமம் பகுதியை சேர்ந்த 15வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சிறுமியிடம் அமரவிளைக்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் கூறியபடி சிறுமி பேருந்தில் அங்கு சென்றுள்ளார்.

அப்போது அரவிந்த் தனது நண்பர்கள் ரெஞ்சித் (25), அகில் (21) ஆகியோர் உதவியுடன் சிறுமியை ஆட்டோவில் கொல்லையில் என்ற இடத்தில் உள்ள அகில் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு வைத்து 3 பேரும் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் சிறுமியை பேருந்தில் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து பெற்றோர்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்த பொலிசார் அரவிந்த், அகில், ரெஞ்சித் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.