பாதி எரிந்த நிலையில் கிடக்கும் கொரோனா நோயாளியின் சடலங்களை நாய் சாப்பிடும் அவலம்!!

523

கொரோனா…………

கொரோனா பாதித்து உயிரிழந்தவர்கள் சடலங்களை நாய் சாப்பிடும் அவலம் ஒடிசாவை உலுக்கியுள்ளது.

பிஜாகமான் என்ற பகுதியில் பாதி எரிந்த உடல்களை நாய்கள் கவ்வி உணவாக சாப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பொது மக்கள் இதுகுறித்து, சப் கலெக்டரை அணுகி உடனடியாக இந்த விஷயத்தை சரி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

போதிய விறகு இல்லாததாலும், நகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில்லாததனாலும், பெரும்பாலான உடல்கள் இங்குள்ள தகன மேடையில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் விடப்பட்டுள்ளன.

இதைத்தான் நாய்கள் இழுத்துச் சென்றுள்ளன. ஒவ்வொரு உடலையும் தகனம் செய்வதற்கு உயிரிழந்தோரின் குடும்பத்தினர் தலா ரூ .7,500 கட்டணம் செலுத்தியுள்ளனர்.

அப்படியும், இப்படியான மோசமான நிலையில் உள்ளது ஒடிசா நிலவரம். VDO.AI “ஒரு கோவிட் நோயாளி இறந்தால், உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்படாது என்று கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் நாங்கள் எதிர்பார்க்கக்கூடியது ஒரு கண்ணியமான தகனம் ஆகும். அதை அதிகாரிகள் செய்ய வேண்டும் “என்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் உறவினர் சரோஜ் குரு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறஇயுள்ளார்.

குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சப் கலெக்டர் லம்போதர் தருவா, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிஜாகமான் சென்று, அந்தப் பகுதியை சுத்தம் செய்யுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து முறையான தகனம் செய்யப்படும் என்று அவர் மக்களுக்கு உறுதியளித்தார்.